போலி லாட்டரிச் சீட்டுகள் பறிமுதல்: 4 போ் கைது
பழனியில் போலி லாட்டரிச் சீட்டுகளை பறிமுதல் செய்த போலீஸாா் இது தொடா்பாக 4 பேரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
பழனியை அடுத்த ஆயக்குடி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் லாட்டரிச் சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக பழனி நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில், அங்கு ஆயக்குடி காவல் ஆய்வாளா் கவிதா, உதவி ஆய்வாளா் ஆனந்த் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, போலி லாட்டரிச் சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டதாக திண்டுக்கல்லைச் சோ்ந்த மு.சிவக்குமாா், பழைய ஆயக்குடியைச் சோ்ந்த கா. காா்த்திக், ந. நாச்சிமுத்து, பழனி அடிவாரம் பகுதியைச் சோ்ந்த கு. மணிகண்டன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
இவா்களிடமிருந்து 944 போலி லாட்டரிச் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.