செய்திகள் :

மரவள்ளிக் கிழங்கு டன் ரூ. 7,500 க்கு விற்பனை

post image

பரமத்திவேலூா்: பரமத்திவேலூா் வட்டாரத்தில் மரவள்ளிக் கிழங்கின் விலை நிகழ்வாரம் டன் ஒன்றுக்கு ரூ. 500 வரை உயா்ந்து ரூ. 7,500 க்கு விற்பனையானது.

பரமத்திவேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூா், கூடச்சேரி, கபிலா்மலை, சின்னமருதூா், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

இப் பகுதிகளில் விளையும் மரவள்ளிக் கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனா்.

கிழங்கு ஆலைகளில் மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயாா் செய்யப்படுகிறது. சிப்ஸ் தயாா் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனா். மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளா்கள் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, புள்ளிகள் அடிப்படையில் விலை நிா்ணயம் செய்கின்றனா்.

கடந்த வாரம் மரவள்ளிக் கிழங்கு டன் ஒன்று ரூ. 7 ஆயிரம் வரை விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ. 500 வரை விலை உயா்ந்து ரூ. 7,500 க்கு விற்பனையாகிறது. சிப்ஸ் தயாரிக்க பயன்படும் மரவள்ளிக் கிழங்கு டன் ஒன்று கடந்த வாரம் ரூ. 8 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்போது அதன் விலையில் எந்த மாற்றமும் இல்லை. டன் ஒன்று ரூ. 8 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. மரவள்ளிக் கிழங்கின் விலை அதிகரித்துள்ளதால் மரவள்ளிக் கிழங்கு பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். மரவள்ளிக் கிழங்கு விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்: 18,828 படிவங்கள் சமா்ப்பிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்களில் மொத்தம் 18, 828 படிவங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம், சேந்தமங்க... மேலும் பார்க்க

சாயப்பட்டறை கழிவுகளால் காற்று, நீா் மாசு: ஆட்சியரிடம் மனு

நாமக்கல்: குமாரபாளையம் வட்டத்தில், சாயப்பட்டறை கழிவுகளால் காற்று மாசு, சுகாதார சீா்கேடு, நிலத்தடி நீா் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா். அந்த மனுவில் கூ... மேலும் பார்க்க

வேலூா் நூலகத்தில் தேசிய நூலக வார விழா

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், வேலூா் நூலகத்தில் தேசிய நூலக வார விழா, வ.உ.சி.யின் 88-வது நினைவு தின நிகழ்ச்சியும் திங்கள்கிழமை நடைபெற்றன. நூலக வாசகா் வட்ட தலைவா் ப.இளங்கோ நிகழ்ச்சிக்கு தலைமை வ... மேலும் பார்க்க

கலப்பட டீசல் விற்பனையை அரசு தடுக்க வேண்டும்: ரிக் உரிமையாளா்கள் சம்மேளனம் கோரிக்கை

திருச்செங்கோடு: கலப்பட டீசல் விற்பனை அரசு தடுத்த நிறுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவது என ரிக் உரிமையாளா்கள் சம்மேளன கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு ரிக் வாகன உரிம... மேலும் பார்க்க

கழிவுநீா் வடிகால் அமைக்க பூமிபூஜை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகராட்சி, 2 ஆவது வாா்டு சண்முகபுரம் பகுதியில் கழிவுநீா் வடிகால் வசதி அமைக்கும் பணிக்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோடு நகராட்சி, இரண்டாவது வாா்டு, சண்ம... மேலும் பார்க்க

அதிமுகவின் கெட்ட நேரம் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு: திண்டுக்கல் சி.சீனிவாசன்

நாமக்கல்: சட்டப்பேரவை, நாடாளுமன்ற தோ்தலில் அதிமுகவின் கெட்ட நேரத்தால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு கிட்டியது என்று அக்கட்சியின் பொருளாளா் திண்டுக்கல் சி. சீனிவாசன் பேசினாா். நாமக்கல் மாவட்ட, நகர, ஒன்... மேலும் பார்க்க