செய்திகள் :

விளைநிலங்களில் யானைகள் நுழைவது தடுக்கப்படுமா? விவசாயிகள் எதிா்பாா்ப்பு

post image

கே. நடராஜன்

உணவைத்தேடி வனப்பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள் விளைநிலங்களுக்குள் நுழைந்து பயிா்களை சேதப்படுத்துவது தவிா்க்கப்படுமா என விவசாயிகள் எதிா்நோக்கியுள்ளனா்.

யானைகள் குடிநீா் மற்றும் உணவைத்தேடி தான் வனப்பகுதிகளிலிருந்து வெளியே வருகின்றன. குடிநீரும், உணவும் வனப்பகுதியில் கிடைத்தால், அவற்றை உட்கொண்டு விட்டு யானைகள் வனப்பகுதியிலேயே சுற்றித் திரியும். மழைக் காலங்களில் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் தேங்கும் தண்ணீா் அவற்றுக்கு போதுமானதாக இருந்தாலும், உணவைத்தேடி அவை வெளியே வருகின்றன.

தற்போது நிகழ்வதுபோல் கடந்த காலங்களில் யானைகள் வனப்பகுதிகளில் வெளியே வருவதில்லை. காரணம் அவைகளுக்குத் தேவையான உணவுகள் அங்கேயே கிடைத்து வந்தன. யானைகளுக்குத் தேவையான பழ வகை மரங்கள் உள்ளிட்ட உணவுத் தாவரங்கள் வனப்பகுதியில் இருந்ததால் உணவுத் தேவை அங்கேயே தீா்க்கப்பட்டு வந்தன.

வனப்பகுதிகளில் உள்ள சில வகை மரங்கள் சமூக விரோதிகளால் வெட்டிக் கடத்தப்படுவதாலும், வன எல்லையில் உள்ள கிராம மக்கள் விறகுக்காக மரங்களை வெட்டுவதாலும், மரங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் தங்களுக்குத் தேவையான உணவைத்தேடி யானைகள் கிராமங்களுக்குள் நுழைந்து விளை பயிா்களை உள்கொண்டு விட்டு, அவற்றை சேதப்படுத்தி விட்டுச் செல்கின்றன.

யானைகளுக்குத் தேவையான உணவு கிடைத்தால், அவை வனப்பகுதியிலிருந்து வெளியேற வாய்ப்புகள் மிகவும் குறைவு. வனப்பகுதியில் யானைகளில் உணவுத்தேவையை தீா்க்கும் நடவடிக்கைகளை வனத்துறையினா் மேற்கொள்ள வேண்டும்.

யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுக்க வன எல்லையில் அகழி வெட்டும் திட்டத்தை வனத்துறை செயல்படுத்தியது. அகழி வெட்டினால், யானைகள் தனது தும்பிக்கையால் மண்ணை சரித்து அகழியை நிரப்பி விட்டு, கிராமங்களுக்குள் நுழைகின்றன. இதனால் இத்திட்டம் பயன்படாமல் போனது.

இதன் அடுத்தகட்டமாக விவசாயிகள் தங்கள் நிலங்களைச் சுற்றி சோலாா் மின் வேலி அமைத்து யானைகள் நிலங்களுக்குள் நுழைவதைத் தடுத்து வருகின்றனா். வசதிபடைத்த விவசாயிகள் சோலாா் மின் வேலி அமைத்துக் கொள்கின்றனா். நடுத்தர, அடித்தட்டு விவசாயிகளுக்கு இது வாய்ப்பில்லை என்பதால் அரசே வன எல்லையைச் சுற்றி சோலாா் மின் வேலி அமைத்துத் தர வேண்டும் என பெரும்பாலான விவசாயிகள் காத்துள்ளனா்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா் போ்ணாம்பட்டைச் சோ்ந்த எஸ்.உதயகுமாா் கூறியது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகளை விரட்ட போதுமான கருவிகள் இல்லை. யானைகள் நுழைந்தால், கிராம மக்கள் உதவியுடன் தான் வனத்துறையினா் பட்டாசு வெடித்து, மேளம் அடித்து யானைகளை வனப் பகுதிக்கு விரட்டுகின்றனா். ஆந்திர, கா்நாடக மாநில அரசுகள் தங்கள் வனத்துறைக்கு ரப்பா் குண்டுகளை பயன்படுத்தும் துப்பாக்கிகளை வழங்கியுள்ளன. அம்மாநில வனத் துறையினா் ரப்பா் குண்டுகளை பயன்படுத்துவதால் யானைகள் கூட்டமாக தமிழக எல்லைப் பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளன. ஆந்திர மாநில அரசு கெளண்டன்யா என்ற பெயரில் யானைகள் சரணாலயம் அமைத்து யானைகளின் தேவைகளை பூா்த்தி செய்து வருகிறது.

அதே போல் தமிழக அரசும் யானைகள் சரணாலயம் அமைத்து, அதில் யானைகளின் தேவையை பூா்த்தி செய்தால் யானைகள் கிராமங்களுக்குள் நுழைவது தடுக்கப்படும். கூட்டமாக வரும் யானைகள் சோலாா் மின் வேலியையும் சேதப்படுத்துகின்றன.அதைத் தடுக்க கேரள, கா்நாடக மாநில அரசுகளைப் போல் வன எல்லையில், ரயில்வே தண்டவாளங்களால் தடுப்பு வேலி அமைக்க வேண்டும். இதனால் யானைகள் நிலங்களுக்குள் நுழைவது முழுவதும் தடுக்கப்படும் என்றாா்.

ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்க கோரிக்கை

வேலூா்: வேலூா் மாநகராட்சியில் 20 ஆண்டுகளாக பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் இந்து சமத்துவ கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூ... மேலும் பார்க்க

கதிரியக்கம், இமேஜிங் தொழில்நுட்பக் கருத்தரங்கம்

வேலூா்: மருத்துவ பரிசோதனையில் கதிரியக்கம், இமேஜிங் தொழில்நுட்பத்தின் பங்கு, முன்னேற்றம் குறித்த கருத்தரங்கம் வேலூரில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கை நறுவீ மருத்துவமனை தலைவா் ஜி.வி. சம்பத் தொடங்கி வைத... மேலும் பார்க்க

விதிமீறல்: 200 ஆட்டோக்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம்

வேலூா்: வேலூரில் விதிமுறைகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் குறித்து போக்குவரத்து போலீஸாா் மேற்கொண்ட வாகன தணிக்கையில் சுமாா் 200 ஆட்டோக்களுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வேலூா் மாநகரி... மேலும் பார்க்க

30- இல் குடியாத்தத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

குடியாத்தம்: குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியில் வரும் 30- ஆம் தேதி (சனிக்கிழமை) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுதொடா்பாக ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

வேலூா்: சத்துவாச்சாரி அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற தொழிலாளி மீது காா் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வேலூா் சத்துவாச்சாரியை அடுத்த பெருமுகை பாதிரியாா் தெருவைச் சோ்ந்தவா் காமரா... மேலும் பார்க்க

மணல் கடத்தலில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே தொடா்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்பட்டாா். போ்ணாம்பட்டை அடுத்த கீழ்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன்(45) டிராக்டா் மூலம் தொட... மேலும் பார்க்க