சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு- உச்சநீதிமன்ற...
மத்திகிரி கோழியின உற்பத்தி மேலாண்மை கல்லூரியில் கண்காட்சி
ஒசூா்: ஒசூா் அருகே உள்ள மத்திகிரியில் செயல்பட்டு வரும் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியில், சென்னையிலுள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், இந்திய அரசின் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடா்பு மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து 2024-இன் தேசிய அறிவியல் தினத்துக்கான அறிவியல் திட்ட கண்காட்சி - 2024 நடைபெற்றது.
இக்கண்காட்சியை கல்லூரி முதல்வா் ச.த.செல்வன் முன்னிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலா் கே.காா்த்திகேயனி தொடங்கி வைத்தாா்.
இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா்களும், ஒசூா் பகுதியைச் சுற்றியுள்ள பள்ளி மாணவ, மாணவிகளும் என 120 போ் பங்கேற்றனா். நிறைவு விழாவில் கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநா் எஸ்.இளங்கோவன் சிறப்புரை வழங்கினாா். பின்னா்அறிவியல் கண்காட்சி-2024-இல் பங்கேற்று சிறப்பான கருத்துகளையும், கண்டுபிடிப்புகளையும் விளக்கி காண்பித்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) முதல்வா் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி ஊக்கப்படுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினா்களுக்கும், அனைத்து பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளுக்கும், ஆசிரிய பெருமக்களுக்கும், காணவந்த சுற்றுப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணாக்கா்களுக்கும், ஏற்பாட்டாளா்களுக்கும் கல்லூரி பேராசிரியா் பெ.சம்சுதீன் நன்றி தெரிவித்தாா்.