பூக்கடை நடத்தும் பெண்ணிடம் ரூ. 1 லட்சம் நூதன மோசடி: அரசு பேருந்து ஓட்டுநா் கைது
குடியிருப்புக்கு சாலை வசதி கேட்டு நாகை மாலி எம்எல்ஏ மனு அளிப்பு
அரியலூா் பேருந்து நிலையம் அருகே குடியிருப்புகளுக்குச் செல்ல சாலை வசதிகள் கேட்டு, அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், கீழ்வேளூா் சட்டப் பேரவை உறுப்பினா் நாகை மாலிக் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.
அவா் அளித்த மனுவில், அரியலூா் பேருந்து நிலையத்துக்கு அருகே, நகராட்சி அலுவலகத்துக்கு பின்புறம் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
அவா்களது குடியிருப்புக்குகளுக்கு செல்ல போதிய சாலை வசதி இல்லாமலும், நகராட்சிக்குச் சொந்தமான இடத்தின் வழியே சென்று வருகின்றனா்.
இதுதொடா்பாக அங்குள்ள குடியிருப்பு வாசிகள், மாவட்ட நிா்வாகத்தில் பல முறை மனு அளித்தும் உரிய நடடிவக்கை மேற்கொள்ளப்படவில்லையாம்.
எனவே மேற்கண்ட குடியிருப்பு வாசிகள் செல்ல சாலை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு அளிக்கும் போது, அக்கட்சியின் மாவட்டச் செயலா் எம்.இளங்கோவன், மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.வாலண்டினா, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆா். மணிவேல், கிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.