செய்திகள் :

தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு!

post image

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக புதன்கிழமையும் உயர்ந்துள்ளது.

கடந்த வாரத்தில் சரிவைக் கண்ட தங்கம், சவரனுக்கு ரூ. 2,000-க்கு மேல் குறைந்து ரூ. 55,480-க்கு சனிக்கிழமை விற்பனை ஆனது.

இந்த வாரத்தின் தொடக்கம் முதல் அதிகரித்த தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 56,520-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதையும் படிக்க : வாக்காளர்கள் முழு ஆர்வத்துடன் வாக்களியுங்கள்! -பிரதமர் மோடி, அமித் ஷா வேண்டுகோள்

இந்த நிலையில், மூன்றாவது நாளாக புதன்கிழமை காலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 7,115-க்கும், ஒரு சவரன் ரூ. 56,920-க்கும் விற்பனையாகிறது.

24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் ரூ. 7,620-க்கும் ஒரு சவரன் ரூ. 60,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ. 101-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,01,000-க்கும் விற்கப்படுகிறது.

சரிவுக்குப் பிறகு மீண்டும் மீண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: தொடர்ந்து 4 நாட்கள் சரிவை முறியடித்த பிறகு, புளூ சிப் பங்கு நிறுவங்களான ஹெச்டிஎஃப்சி வங்கி, டெக் மஹிந்திரா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய பங்குகளை முதலீட்டாளர்கள் தொடர்ந்து வாங்கியதால் பங்கு... மேலும் பார்க்க

உயர்வுடன் தொடங்கிய பங்குச் சந்தை!

இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (நவ. 19) உயர்வுடன் தொடங்கியது. வணிகநேரத் தொடக்கத்தில் சென்செக்ஸ் 451 புள்ளிகள் உயர்வுடனும் நிஃப்டி 23700 புள்ளிகளுக்கு மேலும் இருந்தது.மீடியா மற்றும் ரியாலிட்டி துறை ... மேலும் பார்க்க

தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 உயா்வு!

சென்னையில் தங்கம் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.55,960-க்கு விற்பனையானது.சென்னையில் தங்கத்தின் விலை கடந்த வாரம் தொடா்ந்து குறைந்து வந்த நிலையில், சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ர... மேலும் பார்க்க

பி.டி.சி இண்டஸ்ட்ரீஸ் லாபம் இரட்டிப்பு!

புதுதில்லி: பொறியியல் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான பி.டி.சி. இண்டஸ்ட்ரீஸ் (ப்ரிசிஷன் டூல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்) நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் 2024 செப்டம்பா் காலாண்டில், இரு மடங்காக ... மேலும் பார்க்க

சென்செக்ஸ் 241 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 23,500 புள்ளிகளுக்கும் கீழே முடிந்தது; டெக் பங்குகள் பெறும் பின்னடைவு!

மும்பை: இன்றைய முதல் நாள் வர்த்தகத்தில், இந்திய பங்குச் சந்தையின் குறியீடு சற்று உயர்ந்து தொடங்கிய சற்று நேரத்தில், மீண்டும் சரிந்தது முடிந்தது.அன்னிய முதலீட்டு தொடர்ந்து வெளியேறுவதாலும், ஐடி பங்குகள... மேலும் பார்க்க

டாப் 10 நிறுவனங்களில் எட்டு நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ.1.65 லட்சம் கோடி இழப்பு!

புதுதில்லி: அதிக மதிப்புமிக்க 10 நிறுவனங்களில் எட்டு நிறுவனங்களின் சந்தை மதிப்பீடு கடந்த வாரம் சுமார் ரூ.1,65,180.04 கோடி இழப்பை சந்தித்தன. இதில் எச்.டி.எஃப்.சி. வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்திய... மேலும் பார்க்க