செய்திகள் :

இயல்பு நிலைக்குத் திரும்பிய திருச்செந்தூர் கோயில் யானை; முகாமிற்கு அனுப்ப திட்டமா.. என்ன நடக்கிறது?

post image

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தெய்வானை கடந்த 18-ம் தேதி உதவி பாகர் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசபாலன் ஆகியோரை துதிக்கையால் தாக்கி, காலாலும் உதைத்தது. யானை குடிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், உதயகுமாரின் உறவினரான சிசுபாலன், யானையின் துதிக்கையில் முத்தமிட்டு, நீண்ட நேரமாக பல கோணங்களில் செல்போனில் செல்ஃபி எடுத்துள்ளார். இதில் ஆக்ரோஷமான யானை தெய்வானை துதிக்கையால் தாக்கியுள்ளது. சிசுபாலனை காப்பாற்ற வந்த உதவி பாகர் உதயகுமாரையும் தாக்கியுள்ளது. இதில் காயமடைந்த இருவரும் உயிரிழந்தனர்.

சோர்வாக காணப்படும் தெய்வானை யானை

சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பிய யானை மண்டியிட்டு உதயகுமாரை துதிக்கையால் தட்டி எழுப்பி சத்தமிடும் காட்சிகள் பதிவாகியிருந்தன.  இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக திருக்கோயில் கண்காணிப்பாளர் வெங்கடேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருக்கோயில் காவல் நிலைய போலீஸார் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   இதனையடுத்து கால்நடை மருத்துவ அலுவலர் மனோகரன், கால்நடைத்துறை பேராசிரியர் முத்துகிருஷ்ணன், மாவட்ட வனச்சரக அலுவலர் ரேவதி ராமன், திருச்செந்தூர் கோட்ட வனச்சரக அலுவலர் கவின்,  கால்நடை மருத்துவர்கள் பொன்ராஜ், அருண் உள்ளிட்டோர் யானையை பரிசோதனை நடத்தினர்.

தொடர்ந்து 24  மணி நேரமும் சுழற்சி முறையில் கால்நடை மருத்துவர்கள் குழு, யானையின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.  இச்சம்பவத்திற்குப் பிறகு உணவு எடுத்துக் கொள்ளாமல் இருந்த தெய்வானை தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டதாக மருத்துவர்கள் குழுவினர் கூறியுள்ளனர். இன்னும் 5 நாட்களுக்கு யானை, வனத்துறை அலுவலர்கள் மற்றும் கால்நடைத்துறை மருத்துவர்களின்  கண்காணிப்பில் இருக்கும். அதன்பிறகு யானையின் செயல்பாடுகள் குறித்து அரசுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்படும் என்கிறார்கள். 

கால்நடை மருத்துவர்கள், வனத்துறையினர் ஆய்வு

இயல்புநிலைக்குத் திரும்பி விட்டதாகக் கூறப்பட்டாலும் வழக்கமாக யானை நின்ற இடத்திலேயே துதிக்கையை அசைத்துக் கொண்டும், தலையை ஆட்டிக் கொண்டிம் இருக்கும். ஆனால், கடந்த 2 நாட்களாக சோகமாகவும், அமைதியாகவும் காணப்படுகிறது. தொடர் கண்காணிப்பிற்குப் பிறகு திருக்கோயிலில் உள்ள தற்போதைய  யானைக் குடிலில் பராமரிக்கலாமா என்பது குறித்தும், முதுமலை அல்லது திருச்சியில் உள்ள யானைகள் முகாமிற்கு அனுப்பலாமா என்பது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர்.  யானைக் குடிலைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. யானைக் குடிலின் அருகில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Rain Alert: `நவம்பர் 25, 26 தேதிகளில் கனமழை' - விடுமுறை தொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட அன்பில் மகேஸ்!

வடகிழக்குப் பருவமழை ஆரம்பித்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை, அடை மழை, கன மழை என பெய்து வருகிறது.கடந்த ஆண்டைவிடவும் இந்த ஆண்டு மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என் வானிலை ஆய்வு மையம் முன்... மேலும் பார்க்க

1000 நாள்களை எட்டிய போர்... உக்ரேனுக்கு எதிராக அணு ஆயுதத்தை கையிலெடுக்கப்போகிறதா ரஷ்யா?!

ஓயாத போர் மேகம்!1000 நாள்கள்...ஆயிரம் நாட்களைக் கடந்தும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்ரோஷப் போர் இன்னும் நின்றபாடில்லை. போர் நிறுத்தும் ஏற்படுமா என உலக நாடுகள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், உக... மேலும் பார்க்க

திருவேற்காடு: கோலடி ஆக்கிரமிப்பு; தற்கொலை செய்துகொண்ட தச்சு தொழிலாளி... போராட்டத்தில் சீமான்!

திருவேற்காடு மாநகராட்சி பகுதியில் கோலடி ஏரி பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற முடிவு செய்திருக்கிறது, வருவாய்த்துறை. இதையடுத்து நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் சதீஷ்குமார் தலைமையில... மேலும் பார்க்க

கள்ளச்சந்தையில் விற்கப்படும் ரேஷன் பொருள்கள்; அரசுக்கு ரூ.69,000 கோடி இழப்பு - ICRIER அறிக்கை!

இந்தியாவின் பொது விநியோக அமைப்பு (Public Distribution System) மூலம் ஆண்டுக்கு 814 மில்லியன் மக்களுக்கு இலவச தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்காக 20 மில்லியன் டன் அரிசி, கோதுமை ஏற்றுமத... மேலும் பார்க்க

``திராவிடக் கட்சிகள் செய்த நல்ல காரியங்களை புறக்கணித்துவிட முடியாது” - சொல்கிறார் பா.ம.க கே.பாலு

``2026 சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க-வின் கூட்டணி நிலைப்பாடென்ன.. `பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என மருத்துவர் ராமதாஸ் ட்வீட் செய்திருக்கிறாரே?”`பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என மருத்துவர் ராமதாஸ்... மேலும் பார்க்க

TVK: "அதிமுகவுடன் கூட்டணியா?" -'த.வெ.க' பொதுச்செயலாளர் ஆனந்த் விளக்கம்

'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியின் முதல் மாநாட்டில் விஜய் கூட்டணியை வரவேற்று பேசியதிலிருந்து விஜய் யாருடன் கூட்டணி வைக்கப்போகிறார், அவருடன் யார்யார் கைகோர்க்கப் போகிறார்கள் என்பதுதான் அரசியலில் பேசுபொரு... மேலும் பார்க்க