செய்திகள் :

`யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை' - விஜய் குறித்த கேள்விக்கு செந்தில் பாலாஜியின் பதில்

post image

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “ஆர்எஸ் புரம் பகுதியில் ரூ.9.67 கோடி மதிப்பிலான ஹாக்கி மைதானத்தின் பணிகள் விரைவில் தொடங்கும். இது ஹாக்கி விளையாட்டு வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கை.

செந்தில் பாலாஜி

அவர்களின் கோரிக்கையை முதல்வரும், விளையாட்டுத் துறையை நிர்வகிக்கும் துணை முதல்வரும் செயல்படுத்தியுள்ளனர். இந்தியாவின் விளையாட்டுத்துறை தலைநகராக மாற்றும் அளவுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனர்.

செயற்கை புள்வெளியுடன் அமையவுள்ள இந்த மைதானத்தை 2025ம் ஆண்டு  ஏப்ரல் மாதம் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். கோவை மாநகராட்சியில் ரூ.935 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன.

கோவை

இதேபோல சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளும் விரைவில் தொடங்கப்படும். கடந்த ஆட்சியில் சாலைகள் போடாததால் தான் சில பகுதிகளில்  மோசமாக இருக்கிறது.” என்றார்.

விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, “யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. யாரையும் குறைவாக சொல்லவில்லை.

தவெக தலைவர் விஜய்

அரசு நிகழ்ச்சிகளில் அரசியல் சார்ந்த கேள்விகள் கேட்பதை தவிர்க்க பாருங்கள். அரசியல் கூட்டங்களில் அதைக் கேளுங்கள்.” என்று கூறினார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MadrasNallaMadras

ஆசிரியர் கொலை: "சம்பவ இடத்தில் இருந்த மாணவர்களுக்கு கவுன்சிலிங்...!"- அன்பில் மகேஸ் கூறியதென்ன?

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச... மேலும் பார்க்க

தஞ்சாவூர்:``அரசு மருத்துவரைத் தொடர்ந்து அரசுப் பள்ளி ஆசிரியை..." - சாடும் எடப்பாடி பழனிசாமி

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனைப் பகுதியைச் சேர்ந்தவர் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.இவரை சின்னமனைப் பகுதியைச் சேர்ந்த மதன் குமார் என்... மேலும் பார்க்க

"அதிமுக-வுடன் கூட்டணி இல்லை" - போட்டுடைத்த விஜய்... உடைந்த உளவுத்துறை கேம்?!

சமீப நாள்களாக, 'அ.தி.மு.க-வுடன் த.வெ.க கூட்டணி அமைக்கப் போகிறது', '154 இடங்களில் அ.தி.மு.க-வும் 80 இடங்களில் த.வெ.க-வும் கூட்டணி அமைத்துப் போட்டியிட போகின்றன', 'அ.தி.மு.க கூட்டணியில் துணை முதல்வராகப் ... மேலும் பார்க்க

``ஏழை மக்களுக்கு வழங்க வேண்டிய 5.2 லட்சம் டன் அரிசி கடத்தல்" - தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்

தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடை அரிசி கடத்தலால் 2022-23ம் ஆண்டில் ரூ.1,900 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அதைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: "தேர்தல் நேரத்தில் கிரிப்டோகரன்சி ஊழலா?" - பாஜக மீது தேர்தல் ஆணையத்தில் சுப்ரியா புகார்

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் இன்று (நவம்பர் 20) அதிகாலையில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடந்து வருகிறது. இத்தேர்தலுக்கு முந்தைய தினமான நேற்று மாலை பா.ஜ.க தேசியச் செயலாளர் வினோத் தாவ்டே, மும்பை அருகே... மேலும் பார்க்க

Maori: "உரிமைகளைப் பறிக்கப் பார்க்கிறார்கள்.." - நியூசிலாந்து தலைநகரை ஸ்தம்பிக்க மாவோரி பழங்குடிகள்

வைதாங்கி ஒப்பந்தமானது நியூசிலாந்தின் வரலாறு மற்றும் அதன் அரசியலமைப்பில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நியூசிலாந்தின் 'வைதாங்கி ஒப்பந்தம்' (Waitangi Treaty) என்பது 1840 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரசு மற்... மேலும் பார்க்க