Basics of Share Market 33: `எங்கும்... எதிலும்... இங்கேயும் ஸ்கேம்' - பங்குச்சந்தை மோசடிகள் உஷார்
டிஜிட்டல்களில் பங்குச்சந்தை... ஆன்லைனில் பங்குகள் வாங்கலாம்... விற்கலாம் என்கிற போதே 'ஸ்கேம்' என்ற ஒன்று வந்துவிடுகிறது. முன்பு, ஸ்கேம்கள் இல்லை என்று கூறவில்லை. ஆனால், தற்போது ஆன்லைனில் ஸ்கேம்கள் பெருகிவிட்டன.
பங்குச்சந்தையின் ஆரம்ப நிலையில் இருக்கும் நாம் இந்த மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருப்பது மிக மிக முக்கியம். பங்குச்சந்தை மோசடிகள் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் இருந்தே தொடங்குகிறது. நீங்கள் அதிகம் பங்குச்சந்தை பற்றித் தேடியிருந்தீர்கள் அல்லது முதலீடு செய்திருந்தீர்கள் என்றால் உங்கள் வாட்ஸ் ஆப்பில் ஒரு குரூப் முளைத்துவிடும். அந்தக் குரூப்பில் நீங்கள் இந்தப் பங்கில் முதலீடு செய்யுங்கள்... அதில் முதலீடு செய்யுங்கள் என்று ஏகப்பட்ட டிப்ஸ்கள் வரும்.
அந்த டிப்ஸ்கள் படி, முதலீடு செய்து லாபம் வந்திருக்கிறது என்பது போலவும் பல மெசேஜ்கள் பின்னால் வரும். ஆனால், அதை நம்பவே நம்பாதீர்கள். பங்குச்சந்தையில் நீங்கள் முதலீடு செய்யும்போது முகம் தெரியாத, முன்பின் தெரியாத யாருடைய அறிவுரையையும் கண்டிப்பாக ஏற்காதீர்கள். அவர்கள் பரிந்துரைப்பதுப்போல பரிந்துரைத்து நாம் முதலீடு செய்யும் பணத்தை திருடிவிடுவார்கள்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் போஸ்ட் மூலம் இந்த மோசடிகள் வரலாம். ஆகையால், மோசடிகள் எதில் வந்தாலும், எத்தனை டைப்களில் வந்தாலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது நம் கடமை.
நாளை: பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்களை எப்படி சமாளிக்கலாம்?!