செய்திகள் :

Basics of Share Market 32: பங்குச்சந்தையில் `இது' ஆபத்து; `இதை' பண்ணாதீங்க!

post image
'களத்தில் இறங்குவது' என முடிவு செய்துவிட்டோம் என்று கையில் இருக்கும் அத்தனை காசையும் பங்குச்சந்தையில் கொட்டிவிடக்கூடாது. என்ன தான் பங்குச்சந்தையில் லாபங்கள் குவிந்தாலும், அதில் ரிஸ்க் அதிகம் என்பதை எப்போதும் மறக்கக்கூடாது.

மேலும், 'இவர்கள் சொல்கிறார்கள்... அவர்கள் சொல்கிறார்கள்' என்று ஒரு பங்கில் முதலீடு செய்யாமல், முதலீடு செய்வதற்கு முன்பு, நீங்கள் ஒரு முறை செக் செய்து பார்ப்பது நல்லது. முதன் முதலாக, தானாக முதலீடு செய்யத் தொடங்கும்போது அதிக காசைப் போட்டு ரிஸ்க் எடுக்க வேண்டாம்.

அறிவுரை கேட்கிறீர்கள் என்றால்...

ஆரம்பத்தில், குறைந்த தொகையை போட்டுப் பாருங்கள். 'பங்குச்சந்தை என்றால் என்ன?' என்பது பிடிப்படும் வரை அதே அளவான தொகை அல்லது கொஞ்சம்கூட, குறைச்சலாக மட்டும் முதலீடு செய்யுங்கள்.

பங்குச்சந்தை சம்பந்தமாக யாரிடமாவது அறிவுரை கேட்கிறீர்கள் என்றால், அவர்களுக்கு பங்குச்சந்தை பற்றி நன்கு தெரியுமா என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். பின்பு, அவர்களுடைய அறிவுரையைக் கேளுங்கள்.

குறிப்பிட்ட இடைவெளிகளில் உங்கள் முதலீட்டின் போக்கைக் கவனியுங்கள். தொடர்ந்து இறங்குமுகமாக இருந்தால், அதற்குக் காரணம் என்ன... இனி வளர்ச்சி பாதையில் செல்லுமா என்பதை செக் செய்து முதலீட்டை மாற்றி அமையுங்கள்.

முதலீடு செய்யும்போது 'இந்த லாபம் கிடைக்க வேண்டும்' என்று குறிப்பிட்ட ஒரு தொகையை ஃபிக்ஸ் செய்துகொள்ளுங்கள். உங்கள் முதலீடு அந்தத் தொகையை அடைந்த உடன் முதலீட்டுத் தொகையை எடுத்துக்கொள்ளுங்கள். இன்னும் வேண்டும் என்று பேராசைப்பட்டு இருக்கும் தொகையையும் இழந்துவிடாதீர்கள். காரணம், பங்குச்சந்தை ஏற்ற, இறக்கங்கள் கணிக்கப்பட முடியாதது ஆகும்.

நாளை: 'எங்கும் ஸ்கேம்...எதிலும் ஸ்கேம்...இங்கேயும் ஸ்கேம்' - பங்குச்சந்தை ஸ்கேம்கள் உஷார்!

SBI: ரூ.10,000 கோடிக்கு Infra Bond வெளியிட்ட எஸ்பிஐ; வட்டி எவ்வளவு தெரியுமா? | IPS FINANCE | EPI 67

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...https://bit.ly/TATAStoryepi01 மேலும் பார்க்க

Basics of Share Market 31: `பங்குச்சந்தை முதலீட்டால் அதிக வரி வந்துவிடுமா?’ - தெரிந்து கொள்ளுங்கள்

முதலீடு என்று வரும்போது வருமானம் வரும். வருமானம் வரும்போது வரி வரும். இப்படி நாம் பங்குச்சந்தையில் செய்திருக்கும் முதலீடுகளுக்கும் வரிகள் உண்டு. உங்கள் வருமானத்திற்கு வரி எவ்வளவு என வரி ஃபைல் செய்யும்... மேலும் பார்க்க

Basics of Share Market 30: நிறுவனத்தின் பங்கு மதிப்பு சரியும்போது, பங்கை விற்காதீங்க... வாங்குங்க!

இதுவரையில் வந்த அத்தியாயங்களில் சரியும் பங்கை வாங்காதீர்கள்... நிறுவனத்தை ஆராய்ந்து பங்கை வாங்குங்கள் என அடிக்கடி சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது தலைப்பு அந்தக் கூற்றுக்கு முற்றிலும் மாறாக இருக்... மேலும் பார்க்க

Basics of Share Market 29: கேண்டில் ஸ்டிக் பேட்டர்ன் analaysis-ல் எக்ஸ்பெர்ட் ஆகலாமா?

முந்தைய அத்தியாயங்களில் கேண்டில் ஸ்டிக் பேட்டர்ன் மற்றும் அதன் வகைகளை பற்றி தெரிந்திருக்கிறோம். கேண்டில் ஸ்டிக்கை வைத்து நேற்று, இன்று, நாளை முதலீடுகளை பற்றி தெரிந்துகொள்ளலாம். அதாவது பங்கின் போக்கு எ... மேலும் பார்க்க

உணவுப் பொருள் விலை உயர்வு வட்டி விகிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா? | IPS Finance | EPI - 65

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃபைனான்ஸின் இந்த எபிசோடில்,உணவு விலை பணவீக்கம் பொதுவாக வட்டி விகிதங்களில் சாத்தியமான தாக்கங்கள் உள்பட பல்வேறு பொருளாதார விளைவுகளை ஏற்படுத்துகிறது. உணவு விலை உயர்வுகள் வட்டி விக... மேலும் பார்க்க