மகாராஷ்டிர தேர்தல்: பணம் கொடுத்து சிக்கிய பாஜக தலைவர் வினோத் தாவ்டே?
`ஆப்ரேஷன் செய்யவில்லை என்றால் வைத்தியம் செய்ய முடியாது' - கட்சியினரை எச்சரித்த தங்கமணி
திருச்சி அ.தி.மு.க மாநகர் மாவட்ட கள ஆய்வு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதில், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கோகுல இந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, "கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அ.தி.மு.க நிர்வாகிகள் பொறுமை இல்லாமல், கட்சி வளர்ச்சியில் கவனம் இல்லாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது. கருத்து வேறுபாடு இருந்த காரணத்தால் தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம். மீண்டும் அதேபோல் இருந்தால் தொடர்ந்து எதிர்க்கட்சியாக இருக்க வேண்டியது தான்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
அதனைத்தொடர்ந்து பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "திருச்சி மாவட்ட அ.தி.மு.க-விற்குள் பல்வேறு கோஷ்டிகள் இருக்கின்றன. கட்சிக்குள் இருக்கும் குழப்பம், கருத்து வேறுபாடுகளைப் பேசித் தீர்ப்போம். முடியவில்லை என்றால் அதைப் பொதுச்செயலாளரிடம் கொண்டு செல்வோம். ஆபரேசன் செய்யவில்லை என்றால் வைத்தியம் செய்ய முடியாது. சசிகலாவை முதலமைச்சராக்க வேண்டும் என அனைவரும் முடிவு செய்து இருந்தபோது அப்போது தான் தீர்ப்பு வந்து அவர் சிறை சென்றார். அதன் பின் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நம்பிக்கையான ஒருவரை தெய்வமாகப் பார்த்துக் கொடுத்தது. செல்லாக் காசுகளால் ஒரு பயனும் இல்லை. அதுகுறித்து யாரும் கவலைப்படாதீர்கள். ஓ.பன்னீர்செல்வத்திற்குத் துரோகம் செய்தவர்கள் சசிகலாவும், தினகரனும் தான்" என்றார்.