செய்திகள் :

மும்பை: ``தாராவி திட்டத்தை அதானிக்குக் கொடுக்க தாக்கரேதான் முடிவு செய்தார்" முதல்வர் ஷிண்டே பகீர்

post image
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் களத்தில் தாராவி பிரதான விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதானி க்கு கொடுக்கப்பட்ட தாராவி குடிசை மேம்பாட்டுத்திட்டத்தை ரத்து செய்வோம் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் ஒரு லட்சம் கோடி மதிப்புள்ள தாராவி நிலம் அதானிக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது என்று தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் கூறினார். இத்தேர்தல் சர்ச்சை குறித்து மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டியில்,''தாராவி குடிசை மேம்பாட்டுத் திட்டம் குறித்து உத்தவ் தாக்கரேயும், ராகுல் காந்தியும் குழப்பமான தகவல்களைப் பரப்புகின்றனர். தாராவி திட்டத்தை அதானி நிறுவனத்திற்குக் கொடுக்க மகா விகாஷ் அகாடி அரசுதான் முடிவு செய்தது.

உத்தவ் தாக்கரே மற்றும் காங்கிரஸ் அரசு இருந்தபோதுதான் தாராவி திட்டத்திற்கான டெண்டரை அதானி நிறுவனத்திற்குக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது அதானியுடன் நட்பாக இருந்தார்கள். சந்தித்து பேசினார்கள். எல்லாம் நல்லபடியாகத்தான் சென்று கொண்டிருந்தது. சிலர் அதானியின் காரில் கூட சென்றனர். உத்தவ் தாக்கரே ஆட்சியில் தாராவி குடிசை மேம்பாட்டுத்திட்டத்தில் தகுதியானவர்களுக்கு மட்டுமே வீடு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் எங்களது ஆட்சியில் அனைவருக்கும் குறிப்பாக இலவச வீடு பெற தகுதியில்லாதவர்களுக்கும் வீடு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் இரண்டு லட்சம் பேர் வீடு பெறுவார்கள்.

நான் சொல்வது சரியா தவறா? தாராவி மக்கள் தொடர்ந்து குடிசையில்தான் இருக்கவேண்டுமா? நீங்கள் ஒன்று, இரண்டு என்று பங்களா கட்டிக்கொண்டே செல்வீர்கள். ஆனால் தாராவி மக்கள் நல்ல வீட்டில் வசிக்கக் கூடாதா? சாமானிய மக்களின் நலனுக்கு மஹாயுதி அரசு மீண்டும் ஆட்சிக்கு வருவது அவசியம்''என்றார். இது குறித்து பா.ஜ.க செயலாளர் வினோத் தாவ்டே கூறுகையில்,''தாராவி மக்களுக்கு நல்ல வீடு கிடைப்பதை ராகுல் காந்தி விரும்பவில்லை. பா.ஜ.க-மோடி-அதானியை ஒப்பிட்டுப் பேசுவது சரியல்ல. முந்த்ரா துறைமுகம் காங்கிரஸ் ஆட்சியில்தான் அதானிக்குக் கொடுக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில்தான் எனது உண்மையான வளர்ச்சி இருந்தது என்று அதானியே குறிப்பிட்டு இருக்கிறார்" என்றார். மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்களில் 412 பேர் மீது கொலை, பாலியல் வன்கொடுமை, கொலை முயற்சி போன்ற வழக்குகள் பதிவாகி இருக்கிறது. 1034 வேட்பாளர்கள் அதிக பட்சம் 12வது வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளனர்.

"LIC இணையதளம் இந்தி திணிப்பிற்கான கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது"- முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் LIC-யின் இணைய தளத்தின் முகப்புப் பக்கம் இதுவரை ஆங்கில மொழியில் இருந்த நிலையில் இப்போது இந்தியில் மாற்றப்பட்டுள்ளது.``இது பிற மொழி பேசும் மக்கள் மீதான இந்தித் திணிப்பு. ... மேலும் பார்க்க

`ஆப்ரேஷன் செய்யவில்லை என்றால் வைத்தியம் செய்ய முடியாது' - கட்சியினரை எச்சரித்த தங்கமணி

திருச்சி அ.தி.மு.க மாநகர் மாவட்ட கள ஆய்வு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதில், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கோகுல இந்திரா ... மேலும் பார்க்க

``இந்தியில் LIC இணையதளம்; எப்படித் திணிக்கலாம் என்பதிலேயே மத்திய அரசு..!" - இபிஎஸ், வைகோ கண்டனம்

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, LIC இணையதளத்தில் இந்தி திணிப்பு என மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.இது குறித்து, எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமி, ``பொதுத்துற... மேலும் பார்க்க

G20: உலக நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவின் திட்டங்களை விளக்கிய பிரதமர்; என்னென்ன தெரியுமா?

2333இந்தியப் பிரதமர் மோடி நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அதன் ஒருபகுதியாக பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகருக்கு சென்​றார். அங்கு பிரேசிலுக்கான இந்திய தூத... மேலும் பார்க்க

Indira Gandhi:``என் பாட்டியிடமிருந்துதான் இதைக் கற்றேன்..." - ராகுல் காந்தி பகிர்ந்த செய்தி

நேருவின் மகள் என்ற அடையாளத்தைக் கடந்து, இந்தியாவின் இரும்புப் பெண் என்ற பெருமையைப் பெற்றவர் இந்திரா காந்தி.உலகின் இரண்டாவது பெண் பிரதமர், இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியின் பிறந்த நாளா... மேலும் பார்க்க