கைக் குழந்தையை இழுத்துச் சென்ற காட்டு விலக்கு?
உத்தரப் பிரதேசத்தில் பிறந்து 9 நாள்களேயான குழந்தையை இழுத்துச் சென்ற காட்டு விலங்கை வன அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் புஜேரா கிராமத்தில் உள்ள தோட்டத்தில், கீதா தேவி என்பவர் தனது 19 நாள்களேயான குழந்தை காஜலுடன் செவ்வாய்க்கிழமை (நவ. 19) தூங்கிக் கொண்டிருந்தார். இந்த நிலையில், நள்ளிரவில் ஏதோ சப்தம் கேட்டு விழித்த கீதா தேவி, அருகில் படுத்திருந்த மகளை அடையாளம் தெரியாத காட்டு விலங்கு ஒன்று இழுத்துச் சென்றதாகக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, கீதா அலார ஒலியை எழுப்பியவுடன், கிராம மக்கள் ஒன்றுகூடி, குழந்தையைத் தேடத் தொடங்கினர். மேலும், வன அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்க்கப்பட்டு, அவர்களும் சம்பவ இடத்தை அடைந்தனர்.
இரண்டு வனத் துறை குழுக்கள் காட்டுக்குள் சென்ற போதிலும், இதுவரையில் விலங்குகளின் கால் தடங்களோ தடயங்களோ எதுவும் கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர். தொடர்ந்து, காட்டுக்குள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக வனத் துறை அதிகாரி டாக்டர் செம் மாறன் தெரிவித்தார்.
இதையும் படிக்க:ஏஞ்சல் படத்தில் விலகிய துணை முதல்வர் உதயநிதி! ரூ. 25 கோடி கேட்ட தயாரிப்பாளர் மனு தள்ளுபடி!