செய்திகள் :

மகாராஷ்டிரா: "தேர்தல் நேரத்தில் கிரிப்டோகரன்சி ஊழலா?" - பாஜக மீது தேர்தல் ஆணையத்தில் சுப்ரியா புகார்

post image

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் இன்று (நவம்பர் 20) அதிகாலையில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடந்து வருகிறது. இத்தேர்தலுக்கு முந்தைய தினமான நேற்று மாலை பா.ஜ.க தேசியச் செயலாளர் வினோத் தாவ்டே, மும்பை அருகே வாக்காளர்களுக்கு ரூ.5 கோடி கொடுக்க ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர்.

ஹோட்டலில் இருந்து 9 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வினோத் தாவ்டே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்புகார் வெளியில் வந்தவுடன் பா.ஜ.க புதிய ஊழல் புகாரைத் தெரிவித்துள்ளது. சரத்பவார் மகள் சுப்ரியா சுலே மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் நானாபட்டோலே ஆகியோர் கிரிப்டோகரன்சி ஊழலில் ஈடுபட்டு இருப்பதாகக் கூறி வீடியோ ஒன்றை அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுதன்சு வெளியிட்டு எதிர்க்கட்சிகளின் முகமூடி கழற்றப்பட்டு இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தார்.

சுதன்சு

அந்த வீடியோவில் 2018ம் ஆண்டு சுப்ரியா சுலேயும், நானா பட்டோலேயும் கிரிப்டோகரன்சி ஊழலில் ஈடுபட்டதாக ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரவீந்திரநாத் பாட்டீல் தெரிவிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. மேலும், ஐந்து குற்றச்சாட்டுக்களைக் கூறி ஐந்து கேள்விகளை எழுப்பி இருக்கிறார் சுதன்சு. ரவீந்திரநாத் பாட்டீல் போலீஸ் பணியிலிருந்தபோது பணி முடியும் முன்பே விருப்ப ஓய்வு பெற்றார். 2018ம் ஆண்டு கிரிப்டோகரன்சி ஊழல் நடந்தபோது, அது குறித்து விசாரிக்க ரவீந்திரநாத் பாட்டீலும், சைபர் பிரிவு வல்லுநர் பங்கஜ் என்பவரையும் போலீஸார் நியமித்தனர். அவர்கள் விசாரணை நடத்தியபோது ரவீந்திரநாத் கிரிப்டோகரன்சியின் குறிப்பிட்ட பகுதியைத் தனது வங்கிக்கணக்கிற்கு மாற்றிக்கொண்டதாகக் கூறி பங்கஜ் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து ரவீந்திரநாத் பாட்டீல் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இது குறித்து ரவீந்திரநாத்தின் ஆடியோ தகவல்களைத்தான் பா.ஜ.க வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், கிரிப்டோகரன்சி ஊழலில் முக்கிய சாட்சியாகக் கருதப்படும் கெளரவ் மேத்தா மொபைல் செயலி மூலம் சுப்ரியா சுலே மற்றும் நானா பட்டோலேயிக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தார். சுப்ரியா சுலே அனுப்பிய வாய்ஸ் மெசேஜில், "விசாரணையைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். ஆட்சிக்கு வந்த பிறகு பார்த்துக்கொள்கிறோம்" என்று அதில் சுப்ரியா தெரிவித்துள்ளார். இத்தகவல்களை மேத்தா விசாரணையின்போது தன்னிடம் தெரிவித்ததாக ரவீந்திரநாத் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

நானா பட்டோலே

நானா அனுப்பிய வாய்ஸ் மெசேஜில் பணப்பரிமாற்றம் தாமதம் அடைவது குறித்துக் கேட்டு இருந்தார். சுதன்சு இது தொடர்பாக அளித்த பேட்டியில், கிரிப்டோகரன்சி ஊழலில் கிடைத்த பணத்தைத்தான் தேர்தலுக்குச் செலவு செய்ததாகத் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) மற்றும் காங்கிரஸ் மீது குற்றம் சாட்டினார். ஆனால் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள சுப்ரியா சுலே, "நான் எந்த தவறும் செய்யவில்லை. தேர்தல் நேரத்தில் வாக்காளர்களைத் திசை திருப்ப இது போன்ற தகவல்களைப் பரப்புவது தேர்தல் தந்திரம்.

குற்றச்சாட்டு சொன்ன பா.ஜ.க தலைவருடன் எந்த இடத்திலும் அவருடன் இக்குற்றச்சாட்டு குறித்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். இது போன்ற குற்றச்சாட்டுகள் பா.ஜ.கவின் அவநம்பிக்கையைக் காட்டுகிறது" என்று தனது சோசியல் மீடியா பதிவில் சுப்ரியா பகிர்ந்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் இது போன்ற குற்றச்சாட்டுக்களைக் கூறுவது எங்களுக்கு ஒன்றும் ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை என்றும் எனது வழக்கறிஞர் சுவந்துவிற்கு கிரிமினல் நோட்டீஸ் அனுப்புவார் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். அதோடு சுப்ரியா சுலே இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திலும் முறைப்படி புகார் கொடுத்துள்ளார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Maori: "உரிமைகளைப் பறிக்கப் பார்க்கிறார்கள்.." - நியூசிலாந்து தலைநகரை ஸ்தம்பிக்க மாவோரி பழங்குடிகள்

வைதாங்கி ஒப்பந்தமானது நியூசிலாந்தின் வரலாறு மற்றும் அதன் அரசியலமைப்பில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நியூசிலாந்தின் 'வைதாங்கி ஒப்பந்தம்' (Waitangi Treaty) என்பது 1840 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரசு மற்... மேலும் பார்க்க

"கூட்டணிக்கு சும்மா வர்றதில்ல; 20 சீட், ரூ.100 கோடி கேட்கிறாங்க" - போட்டுடைத்த திண்டுக்கல் சீனிவாசன்

திருச்சியில் நேற்று (நவம்பர் 19) அ.தி.மு.க கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,"கடந்த 1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அ.தி.மு.க 53-வது... மேலும் பார்க்க

Putin அணு ஆயுத எச்சரிக்கை; உச்ச கட்டத்தில் Russia Ukraine போர் பதற்றம்| Joe Biden

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...https://bit.ly/ParthibanKanav... மேலும் பார்க்க

ஒன் பை டூ: “பா.ஜ.க அல்லாத கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைப்போம்” என்ற எடப்பாடி பழனிசாமியின் கருத்து!

டி.ஜெயக்குமார்டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க“உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி. ‘பாசிச பா.ஜ.க தொடர்ந்து மக்கள் விரோதச் செயல்களைச் செய்துவருகிறது. எனவே, இனி அந்தக் கட்சியுடன் கூ... மேலும் பார்க்க

Ukraine War: `உணவுப்பொருள்களை சேமித்து வையுங்கள்' - குடிமக்களை போருக்கு தயாராக்கும் ஐரோப்பிய நாடுகள்

உக்ரைன் மீதான படையெடுப்புத் தொடங்கி 1000 நாள்கள் கடந்த நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவு ரஷ்யா அணு ஆயுத போருக்கான எச்சரிக்கையை எழுப்பியிருக்கிறது. உக்ரைன் அமெரிக்காவின் நீண்ட தூரம் தாக்கும் ஏவுகனைக... மேலும் பார்க்க