கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றியிருப்பது நிர்வாக சீர்குலைவை ஏற்படு...
ஆஸ்திரேலியாவில் விற்பனையாகும் விராட் கோலியின் பேட்..! விலை ரூ.1.65 லட்சம்!
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பேட் ரூ.1.65 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுவதாக வெளியான விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு கிரிக்கெட் உபகரணங்கள் விற்கும் மையத்தில் இந்திய வீரர் விராட் கோலியில் எம்ஆர்எஃப் (MRF) பேட் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.1.65 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்தியா மட்டுமின்றி உலகமெங்கிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். அவருக்கு ஆஸ்திரேலியாவிலும் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.
தக்கவைப்பு தொகையில் உடன்பாடின்றி வெளியேறினேனா? திட்டவட்டமாக மறுத்த ரிஷப் பந்த்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதலாவது ஆட்டம் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி பெர்த் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி சொதப்பி வந்தாலும், கடந்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியாவில் கோலியில் சராசரி 50 ரன்களுக்கும் அதிகமாகவுள்ளது. இதனால், விராட் கோலியின் கம்பேக்கை பார்க்க இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி ஆஸ்திரேலிய ரசிகர்களும் ஆர்வத்தில் உள்ளனர்.
ஸ்மித்தின் சிறந்த ஆட்டத்தை எதிர்பார்க்கிறேன்..! வாட்சன் நம்பிக்கை!
அதற்கு ஒரு உதாரணமாக, ஆஸ்திரேலியாவில் உள்ள கிரேக் சேப்பல் கிரிக்கெட் உபகரணங்கள் விற்கும் மையத்தில் கோலியில் கிரிக்கெட் பேட்டுக்கு 2985 ஆஸ்திரேலிய டாலர்கள் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு இந்திய விலையில் ரூ.1.65 லட்சமாகும். இதன் மற்றொரு சிறப்பம்சமாக அந்த பேட்டில் விராட் கோலியின் கையொப்பமும் இடப்பட்டுள்ளது.
இந்த விலை இந்தியாவில் மிகவும் பிரபலமான குஜராத்தில் நடைபெறும் பிரிட்டிஸ் இசைக்கச்சேரி கோல்ட் பிளே(cold play)வின் டிக்கெட் விலையைவிட மூன்று அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோல்ட் பிளே(cold play)வின் ஒரு நிகழ்ச்சியில் டிக்கெட் விலை ரூ.35,000.
கடைசி ஒருநாள்: நியூசி. பேட்டிங்; ஆறுதல் வெற்றி பெறுமா?
2016 - 2019-ல் சராசரி 55 ரன்கள் வைத்திருந்த விராட் கோலி, 2016-ல் 75 ரன்கள் சராசரியும், 2019-ல் 68 ரன்கள் சராசரியும் வைத்திருந்தார். ஆனால், அடுத்த ஆண்டுகளில் அவரின் சராசரி 25 ரன்களுக்கும் கீழ் குறைந்தது.
விராட் கோலி கடந்த 2 ஆண்டுகளில் இரண்டு சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 13 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 25 இன்னிங்ஸில் 6 சதங்கள், 4 அரைசதங்கள் உள்பட 1,352 ரன்கள் குவித்துள்ளார். மேலும் சராசரியாக 54.08 ரன்கள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.