செய்திகள் :

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல்: 1 மணி நிலவரம்!

post image

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலுக்கான பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு இன்று(நவ. 20) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, இங்குள்ள 288 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோல, ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 பேரவைத் தொகுதிகளில் முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு கடந்த 13-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 38 தொகுதிகளுக்கு இன்று(நவ.20) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஜார்க்கண்ட், மகாராஷ்டிர ஆகிய இரு மாநிலங்களிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை வருகிற நவம்பர் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 32.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதேபோன்று, ஜார்க்கண்ட் மாநிலத்​தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 1 மணி நேர நிலவரப்படி 47.92 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல்: 3 மணி நிலவரம்!

மகாராஷ்டிர பேரவைத் தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு இன்று(நவ. 20) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுக... மேலும் பார்க்க

கைக் குழந்தையை இழுத்துச் சென்ற காட்டு விலக்கு?

உத்தரப் பிரதேசத்தில் பிறந்து 9 நாள்களேயான குழந்தையை இழுத்துச் சென்ற காட்டு விலங்கை வன அதிகாரிகள் தேடி வருகின்றனர்.உத்தரப் பிரதேசத்தில் புஜேரா கிராமத்தில் உள்ள தோட்டத்தில், கீதா தேவி என்பவர் தனது 19 நா... மேலும் பார்க்க

தங்க இருப்பை இந்தியாவுக்கு மாற்றும் ஆர்பிஐ! அறியப்படாத காரணங்கள்!!

போர்ச் சூழல் போன்ற பல்வேறு காரணிகளால் உலக நாடுகளில் பாதுகாப்பாக வைத்திருக்கும் தங்க கையிருப்பை இந்தியாவுக்கு ஆர்பிஐ மாற்றி வருகிறது. உலகிலேயே அதிக தங்க கையிருப்பை கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியாவுக்க... மேலும் பார்க்க

தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையாற்றிய 113 வயது மூதாட்டி..!

மகாராஷ்டிர மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், 113 வயதான காஞ்சன்பென் பாட்ஷா என்ற மூதாட்டி தனது வாக்குரிமையைப் பயன்படுத்தி ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார். மகாராஷ்... மேலும் பார்க்க

தில்லி எய்ம்ஸில் எம்ஆர்ஐ ஸ்கேனுக்கான காத்திருப்பு காலம் 3 ஆண்டுகள்!!

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்வதற்காக சென்ற நோயாளிக்கு 3 ஆண்டுகள் கழித்து தேதி கொடுக்கப்பட்டுள்ளது.தில்லியை சேர்ந்த ஜெய்தீப் தே (வயது 52) என்பவர் வலது கால் காயத்துக்கு சிகிச்சைப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல்: 11 மணி நிலவரம்!

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலுக்கான 11 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு இன்று(நவ. 20) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, இங்குள்ள 288 தொகுதிக... மேலும் பார்க்க