செய்திகள் :

தில்லி எய்ம்ஸில் எம்ஆர்ஐ ஸ்கேனுக்கான காத்திருப்பு காலம் 3 ஆண்டுகள்!!

post image

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்வதற்காக சென்ற நோயாளிக்கு 3 ஆண்டுகள் கழித்து தேதி கொடுக்கப்பட்டுள்ளது.

தில்லியை சேர்ந்த ஜெய்தீப் தே (வயது 52) என்பவர் வலது கால் காயத்துக்கு சிகிச்சைப் பெறுவதற்காக எய்ம்ஸ் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவுக்கு சென்றுள்ளார்.

ஆனால், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுப்பதற்கான தேதி 2027ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு 15,000 புறநோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களில் 10 சதவிகிதம் பேருக்கு எம்.ஆர்.ஐ., எக்ஸ் ரே ஸ்கேன் போன்றவை எடுக்கப்படுகிறது.

இதனால், புறநோயாளிகளுக்கான காத்திருப்பு காலம் 6 மாதங்களில் இருந்து 3 ஆண்டுகள் வரை உள்ளதாக மருத்துவமனை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஜெய்தீப் கூறுகையில், “தில்லி மற்றும் வலையப் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்கு ரூ. 25,000 வரை கேட்கின்றனர், ரூ. 5,000 கூட செலவழிக்க முடியாது நிலையில் நான் உள்ளேன். என்ன செய்வதென்று தெரியாததால், ஸ்கேன் எடுக்கும் முடிவையே கைவிட்டுவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரூ. 2,000 முதல் ரூ. 3,000-க்குள் குறைந்த எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : தஞ்சாவூர்: வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை குத்திக்கொலை

மருத்துவமனை தரப்பில் கூறுகையில், “ஸ்கேன் எடுக்க அதிகளவிலான நோயாளிகள் வருவதால் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சையில் உடனடி ஸ்கேன் தேவைப்படுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நோயின் தீவிரத் தன்மைக்கு ஏற்ப பிற உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளுக்கு காத்திருப்பு காலம் வழங்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரௌடிகளின் தலைநகராக மாறிவிட்டது தில்லி: அதிஷி குற்றச்சாட்டு!

தேசியத் தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக முதல்வர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார். கடந்த வாரம் வடகிழக்கு தில்லியின் சுந்தர் நகரியில் கொல்லப்பட்ட 28 வயது இளைஞரின் பெற்றோரை முதல்வர் சந்தித்தார... மேலும் பார்க்க

நட்சத்திர ஹோட்டலில் ஒரு தேநீர் விலை இவ்வளவா? வரியும் சேர்த்தால்!

மும்பையில் உள்ள தாஜ் மஹால் பேலஸ் என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு முறையாவது ஒரு தேநீராவது குடித்துவிட வேண்டும் என்பது பலரின் நெடுநாள் கனவாக இருக்கும். அந்த வகையில் அத்னான் பதான் என்பவர் தனது நெடுநாள... மேலும் பார்க்க

மணிப்பூர் தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம்!

மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.மணிப்பூர் தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிருதுள் ந... மேலும் பார்க்க

ஏ.ஆர். ரஹ்மான் இசைக் குழுவிலும் ஒருவர் விவாகரத்து!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசைக் குழுவில் கிதார் கலைஞர் மோஹினி டேவும், தனது கணவரை விவாகரத்து செய்யவிருப்பதாக அறிவித்துள்ளார்.ஏ.ஆர். ரஹ்மான் இசைக் குழுவில் பேஸ் கிதார் கலைஞரான மோஹினி டேவும் (29), அவர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் தேர்தல்: 3 மணி நிலவரம்!

மகாராஷ்டிர பேரவைத் தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு இன்று(நவ. 20) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுக... மேலும் பார்க்க

கைக் குழந்தையை இழுத்துச் சென்ற காட்டு விலக்கு?

உத்தரப் பிரதேசத்தில் பிறந்து 9 நாள்களேயான குழந்தையை இழுத்துச் சென்ற காட்டு விலங்கை வன அதிகாரிகள் தேடி வருகின்றனர்.உத்தரப் பிரதேசத்தில் புஜேரா கிராமத்தில் உள்ள தோட்டத்தில், கீதா தேவி என்பவர் தனது 19 நா... மேலும் பார்க்க