மணிப்பூர் தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம்!
திருமண ஊர்வலத்தில் பொழிந்த `பண' மழை... ரூ.20 லட்சத்தை முண்டியடித்துக் கொண்டு அள்ளிச் சென்ற மக்கள்!
ஒவ்வொருவரும் விதவிதமாக திருமணத்தை நடத்துவது வழக்கம். உத்தரப்பிரதேசத்தில் நடந்த திருமணம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. அதோடு அனைவராலும் பேசப்படும் ஒரு திருமணமாகவும் மாறி இருக்கிறது. அந்த வீடியோவில் மணமகன் பல்லக்கில் ஊர்வலமாக அழைத்து வரப்படும் போது பணமழை பொழிந்தது. அவர் வரும் வழியில் இரண்டு ஜே.சி.பி இயந்திரத்தில் ஏறி நின்றுகொண்டு விருந்தினர்கள் பணமழை பொழிந்தனர். 100, 200, 500 ரூபாய் நோட்டுக்களை இதற்காக பயன்படுத்தினர். ஜே.சி.பி மட்டுமல்லாது மணமகன் ஊர்வலம் சென்ற தெருவின் ஓரங்களில் இருந்த கட்டடங்களின் மேலிருந்தும் மணமகன் மீது மணமகன் வீட்டார் பணத்தை மழையாக பொழிந்தனர். இவ்வாறு மொத்தம் 20 லட்சம் ரூபாயை பண மழையாக பொழிந்த பிறகு, மணமகன் அர்மாண் திருமணம் நடைபெறும் இடத்திற்கு சென்றார்.
மழையாக பொழிந்த பணத்தை எடுக்க ஏராளமானோர் திரண்டிருந்தனர். இந்த மணமகன் ஊர்வலத்தை காண வந்திருந்த திரளான விருந்தினர்கள், பொதுமக்களும் முண்டியடித்துக்கொண்டு பணத்தை எடுத்தனர். பண மழை பெய்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது.
கடந்த ஆண்டு இது போன்ற சம்பவம் நடந்தது. குஜராத் மாநிலம், மஹ்சனா என்ற இடத்தை சேர்ந்த கரீம் யாதவ் திருமணத்தில் அவரது உறவினர் கட்டடத்தின் மாடியில் இருந்து 500 ரூபாய் நோட்டுக்களை மணமகன் மீது பணமழையாக தூவினார். இது தவிர மணமகன் ஊர்வலம் சென்ற தெருவின் இருபக்கமும் நின்று கொண்டு உறவினர்கள் மணமகன் மீது பணமழையாக பொழிந்தனர்.