செய்திகள் :

V.T. Rajshekar: `தலித் மக்களுக்காக ஒலித்த குரல்'- மூத்த பத்திரிகையாளர் வி.டி. ராஜசேகர் உயிரிழப்பு

post image
பிரபல மூத்த பத்திரிகையாளரும், தலித் வாய்ஸ் (Dalit Voice) இதழின் நிறுவனரும், ஆசிரியருமான வி.டி. ராஜசேகர் (93) இன்று உயிரிழந்தார்.

1932 ஜூலை 17-ல் கர்நாடகாவில் பிறந்த ராஜசேகர், பின்னாளில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை உரக்க ஒலிக்கும் முகமாக உருவெடுத்தார். இந்தியன் எக்ஸ்பிரஸில் ஒரு பத்திரிகையாளராகத் தனது சமூகப் பணியைத் தொடங்கிய ராஜசேகர், சுமார் 25 ஆண்டுகள் அங்கு பணியாற்றி, தலித் மக்கள் மீது அரங்கேறும் கொடுமைகளை வெளிக்கொண்டுவரும் வகையிலும், அவர்களுக்கான உரிமைகளை வலியுறுத்தும் வகையிலும், 1981-ல் `தலித் வாய்ஸ்' என்ற பத்திரிகையை நிறுவினார்.

வி.டி. ராஜசேகர்

தலித் மக்களின் குரலாக ஒலித்த இந்தப் பத்திரிகை சர்வதேச அளவில் கவனிக்கத்தக்க பத்திரிகையாக உருவெடுத்தது. மனித உரிமைகள் கண்காணிப்பகம் இதனை, `இந்தியாவில் மிகப் பரவலாக பிரசுரம் செய்யப்படும் தலித் பத்திரிகை' என்று பாராட்டியிருக்கிறது. இருப்பினும், 2011-ல் இந்தப் பத்திரிகை மூடப்பட்டது. மறுபக்கம், தனது வெளிப்படையான கருத்துக்களுக்காக பல்வேறு சவால்களையும் இவர் எதிர்கொண்டார்.

1986-ல், இந்துக்களுக்கு எதிராக எழுதியாக இவரின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. மேலும், அதே ஆண்டில் தடா சட்டத்தின் கீழ் பெங்களூரூவில் கைதும் செய்யப்பட்டார். இவர் பல்வேறு நூல்களையும் எழுதியிருக்கிறார். அதில், `கர்நாடகாவில் தலித் இயக்கம்', `இந்து இந்தியாவில் மார்க்ஸ் தோற்றது எப்படி', `கோட்சே ஏன் காந்தியைக் கொன்றார்', `சாதி - தேசத்துக்குள் ஒரு தேசம்' உள்ளிட்ட பல நூல்களை எழுதியிருக்கிறார்.

வி.டி. ராஜசேகர்

அதோடு, கர்நாடக பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர், இந்திய சீன நட்புறவுக் கழக அமைப்பாளர், பெங்களூரூ துளு கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளிலும் இருந்திருக்கிறார். இந்த நிலையில், ராஜசேகர் தனது 93-வது வயதில், மங்களூருவிலுள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்தார். இவரின் இறப்புக்குப் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இறுதிச் சடங்குகள் இவரின் சொந்த ஊரான ஒந்திபெட்டுவில் நாளை நடைபெறவுள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விசாரணை CBI-க்கு மாற்றம்; மேல்முறையீடு கூடாது - மருத்துவர் ராமதாஸ்

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதில், மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தியதால் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.இந்த சம்பவத்தால், ஆளும... மேலும் பார்க்க

ஆசிரியர் கொலை: "சம்பவ இடத்தில் இருந்த மாணவர்களுக்கு கவுன்சிலிங்...!"- அன்பில் மகேஸ் கூறியதென்ன?

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச... மேலும் பார்க்க

தஞ்சாவூர்:``அரசு மருத்துவரைத் தொடர்ந்து அரசுப் பள்ளி ஆசிரியை..." - சாடும் எடப்பாடி பழனிசாமி

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனைப் பகுதியைச் சேர்ந்தவர் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.இவரை சின்னமனைப் பகுதியைச் சேர்ந்த மதன் குமார் என்... மேலும் பார்க்க

`யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை' - விஜய் குறித்த கேள்விக்கு செந்தில் பாலாஜியின் பதில்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “ஆர்எஸ் புரம் பகுதியில் ரூ.9.67 கோடி மதிப்பிலான ஹாக்கி மைதானத்தின் பணிகள் விரைவில் தொடங்கும். இது ஹாக்கி விளையாட்டு வீரர்களின் நீண்ட நாள் க... மேலும் பார்க்க

"அதிமுக-வுடன் கூட்டணி இல்லை" - போட்டுடைத்த விஜய்... உடைந்த உளவுத்துறை கேம்?!

சமீப நாள்களாக, 'அ.தி.மு.க-வுடன் த.வெ.க கூட்டணி அமைக்கப் போகிறது', '154 இடங்களில் அ.தி.மு.க-வும் 80 இடங்களில் த.வெ.க-வும் கூட்டணி அமைத்துப் போட்டியிட போகின்றன', 'அ.தி.மு.க கூட்டணியில் துணை முதல்வராகப் ... மேலும் பார்க்க

``ஏழை மக்களுக்கு வழங்க வேண்டிய 5.2 லட்சம் டன் அரிசி கடத்தல்" - தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்

தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடை அரிசி கடத்தலால் 2022-23ம் ஆண்டில் ரூ.1,900 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அதைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்... மேலும் பார்க்க