மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் சிசிடிவி பொருத்த நடவடிக்கை: அமைச்சர்
மகாராஷ்டிரத்தில் ஆட்சி மாறுமா? கருத்துக் கணிப்பு முடிவுகள்!
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். 288 தொகுதிகளிலும் 4,136 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், சிவசேனை 81 இடங்களிலும், அஜீத் பவார் தலைமையிலான என்சிபி 59 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
எதிர்க்கட்சிகளின் மஹாவிகாஸ் அகாடி கூட்டணியில், காங்கிரஸ் 101 வேட்பாளர்களையும், சிவசேனை (உத்தவ்) 95 வேட்பாளர்களையும், தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) 86 வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளன.
இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
பீப்பள்ஸ் பல்ஸ் (Peoples Pulse) நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி,
மகாயுதி கூட்டணி 175-195
மஹாவிகாஸ் அகாடி கூட்டணி 85 to 112