செய்திகள் :

Messi: 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு வரும் மெஸ்ஸி - எங்கு... எப்போது தெரியுமா?!

post image
அடுத்த ஆண்டு மெஸ்ஸி இந்தியா வர இருப்பதாக கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துரஹிமான் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் மெஸ்ஸிக்கு அதிகளவிலான ரசிகர்கள் உண்டு. அதிலும் குறிப்பாக கால்பந்து விளையாட்டை பிரதானமாக கொண்டு இருக்கும் கேரளாவில் மெஸ்ஸிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு வருகை தர இருக்கிறார்.

மெஸ்ஸி

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச கால்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக அர்ஜென்டினா மெஸ்ஸி அவரது அணியுடன் இந்தியா வர உள்ளதாக கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துரஹிமான் தெரிவித்திருக்கிறார். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துரஹிமான், "உலகின் நம்பர் 1 கால்பந்தாட்ட அணியான அர்ஜென்டினா, கேரளாவில் விளையாட இருக்கிறது. இதில் மெஸ்ஸியும் விளையாட இருக்கிறார். சர்வதேச அளவிலான கால்பந்து போட்டியை நடத்தக்கூடிய உள்கட்டமைப்பு மாநிலத்திற்கு உள்ளது.

அதிக எதிர்பார்ப்புகளை கொண்ட இந்த கால்பந்து போட்டியை நடத்துவதற்கான அனைத்து நிதி உதவிகளையும் மாநில அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்படும். அடுத்த ஒன்றரை மாத காலத்தில் அர்ஜென்டினா அணி நிர்வாக குழுவை சேர்ந்தவர்கள் கேரளா வர உள்ளனர். இது தொடர்பாக கேரள அரசும், அர்ஜென்டினா அணி நிர்வாகமும் கூட்டு அறிவிப்பை வெளியிட முடிவு செய்துள்ளோம்.

அப்துரஹிமான்

அர்ஜென்டினா அணி கேரளா வருவதில் எந்த மாற்றமும் இருக்காது. போட்டியை நடத்தும் தேதியை அர்ஜென்டினா கால்பந்தாட்ட கூட்டமைப்பு அறிவிக்கும்" என்று தெரிவித்திருக்கிறார். மெஸ்ஸியின் வருகையை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

போருக்கு நடுவே ஒரு கனவு; 2026 FIFA கால்பந்து உலகக் கோப்பைக்குத் தகுதிபெறத் துடிக்கும் பாலஸ்தீன் அணி!

பாலஸ்தீன் நாட்டின் ஹமாஸ் குழு, இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தியது. அதற்கு அடுத்தநாள் முதல் இன்றுவரை பாலஸ்தீன் மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. ஓராண்டுக்கு மேலாக... மேலும் பார்க்க