மணிப்பூர் தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம்!
`இதான்டா சினிமா!' - ஒரே படத்தில் மம்முட்டி, மோகன் லால், ஃபகத் ஃபாசில்; இயக்குநர் யார் தெரியுமா?
மல்லுவுட் தற்போது ஒரு பெரிய புராஜெக்ட்டை கையில் எடுத்திருக்கிறது. மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் பலரும் இந்த படத்தில் இணையவிருக்கிறார்கள்.
`டேக் ஆஃப்', `சி யூ சூன்', `மாலிக்' போன்ற திரைப்படங்களின் மூலம் கோலிவுட், டோலிவுட் என அனைத்து இடங்களிலும் கவனத்தை ஈர்த்தார் இயக்குநர் மகேஷ் நாராயணன். இவர் படத்தொகுப்பாளராக இருந்து இயக்குநராக உருவெடுத்தவர். `36 வயதினிலே', `விஸ்வரூபம் 2' போன்ற தமிழ் திரைப்படங்களின் படத்தொகுப்பாளரும் இவர்தான்.
அடுத்ததாக இவர் ஒரு பிரமாண்ட ப்ராஜெக்ட்டை கையில் எடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் மெகா ஸ்டார் மம்முட்டி, மோகன் லால், குன்சாக்கோ போபன், ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் பலரும் நடிக்கவிருக்கிறார்கள். இவர்களைத் தாண்டி இன்னும் பல நட்சத்திரங்களுடன் அதிரடியான மல்டி ஸ்டாரர் திரைப்படமாக இப்படம் உருவாகவிருக்கிறது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்றைய தினம் இலங்கையில் தொடங்கியிருக்கிறது. இலங்கையைத் தொடர்ந்து துபாய், தாய்லாந்து, டெல்லி, கொச்சி, ஹைதராபாத் போன்ற பகுதிகளிலும் அடுத்தடுத்து படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. மம்முட்டியும் மோகன் லாலும் இதற்கு முன்பு பல திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். சேட்டன்கள் இருவரும் இதற்கு முன் `20 - 20', `அதிரத்ரம்' போன்ற பல திரைப்படங்களில் சேர்ந்து களமிறங்கியிருக்கிறார்கள். மம்முட்டி நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியாகியிருந்த `கடல் கடானு ஒரு மாத்துக்குட்டி' திரைப்படத்திலும் மோகன் லால் மோகன் லாலாகவே ஒரு கேமியோ செய்திருப்பார். 11 வருட இடைவெளிக்குப் பிறகு மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் இருவரும் சேர்ந்து ஒரே படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். ஆனால், பகத், மம்முட்டி, மோகன்லால் மூவரும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது இதுதான் முதல் முறை.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...