திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
Mollywood: நடிப்பதை நிறுத்தி விட்டு விவசாய வேலை... ஆடு மேய்க்கும் மோகன்லால் மகன் பிரணவ்..!
2022-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியானப் படம் ஹிருதயம். வினீத் ஸ்ரீனிவாசன் எழுதி இயக்கிய இந்தப் படத்தில், மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடித்திருந்தார். அதற்கு முன்பும் பல படங்களில் அவர் நடித்திருந்தாலும், ஹிருதயம் படம்தான் தமிழ் உள்ளிட்ட பலமொழி ரசிகர்களுக்கும் அவரை அறிமுகப்படுத்தியது. நடிகர் பிரணவ் மோகன்லால் பயணம் செய்வதில் மிக ஆர்வமுடையவர் என்பதை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்ப்பவர்கள் தெரிந்துகொள்ளலாம். இந்த நிலையில், நடிகர் மோகன்லாலின் மனைவியும், தயாராப்பாளருமான சுசித்ரா மோகன்லால் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.
அதில்,``எங்கள் மகன் பிரணவ் மோகன்லால் தற்போது நடிப்பை நிறுத்திவிட்டு, ஸ்பெயினில் ஒரு பண்ணையில் வேலை செய்துவருகிறார். அங்கு குதிரைகள், ஆடுகளை மேய்த்து பராமரிப்பது, தோட்டத்தை கவனித்துக்கொள்வது உள்ளிட்ட வேலைகளை கவனித்துவருகிறார். அவர் செய்யும் வேலைக்கு சம்பளமெல்லாம் கிடையாது. அவர் தங்குவதற்காகவும், உணவுக்காகவும்தான் அந்த வேலைகளை செய்துவருகிறார். இரண்டு வருடத்துக்கு ஒரு படம் நடிக்கிறார். அவர் நடிப்பதற்காக ஸ்கிரிப்ட்களைக் நான் கேட்டுவருகிறேன். ஆனால், அவரிடம் வருடத்துக்கு இரண்டு படங்களாவது நடிக்க வேண்டும் எனக் கேட்டிருக்கிறேன்.
அதற்கு அவர் இதுவரை முழுமையாக பதிலளிக்கவில்லை. அவர் வாழ்வை சமநிலைப்படுத்த முயற்சிக்கிறார் என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். என் கணவரும் மகனும் ஒன்றாக சேர்ந்து நடிக்க வேண்டும் என்பதை நான் விரும்பமாட்டேன். மக்கள் இருவரையும் மக்கள் ஒப்பிட்டு உயர்த்தி, தாழ்த்திப் பேசுவார்கள். அதை நாம் விரும்பவில்லை" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
நடிகர் பிரணவ் மோகன்லால் 2002-ம் ஆண்டு, தனது தந்தையின் திரைப்படமான ஒன்னமன் திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகமானார். 2003-ம் ஆண்டு புனர்ஜனி திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற கேரள மாநில திரைப்பட விருதை வென்றார். மேலும், தமிழ் திரைப்படமான பாபநாசம், மலையாளப் படமான த்ரிஷ்யம், லைஃப் ஆஃப் ஜோசுட்டி ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...