அதானி வெளிநாட்டில் குடியேற ஆயத்தம்? சுப்பிரமணியன் சுவாமி சொன்ன விஷயம்
AR Rahman: ஆடுஜீவிதம் படத்துக்காக HMMA விருதுபெறும் இசைப் புயல்!
கடந்த ஆண்டு வெளியான ஆடு ஜீவிதம் திரைப்படத்துக்காக HMMA விருதைப் பெறுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
ஹாலிவுட் மீயூசிக் இன் மீடியா அவார்ட்ஸ் (HMMA) என்பது திரைப்படம், டிவி நிகழ்ச்சி, வீடியோ கேம்கள், டிரெய்லர்கள், வணிக விளம்பரங்கள், ஆவணப்படங்கள், இசை வீடியோக்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் என அனைத்து காட்சி ஊடகங்களிலும் வரும் இசைகளுக்கு விருது வழங்கும் அமைப்பு.
சுயாதீன திரைப்படத்துக்கான (அந்நிய மொழி) பிரிவில் போட்டியிட்ட ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படத்துக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட ஆடு ஜீவிதம் நாவலின் திரைப்பட வடிவமாக மலையாள இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கிய திரைப்படம் 'ஆடு ஜீவிதம்'. ஆங்கிலத்தில் The Goat Life என்ற பெயரில் வெளியானது.
கடந்த மார்ச் மாதம் வெளியாகி மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. HMMA விருதுகள் ரஹ்மான் மேலும் ஒரு ஆஸ்கர் பெறுவதற்கான அறிகுறி என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஏற்கெனவே கேரள அரசின் திரைப்பட விருதுகள் நிகழ்ச்சியில் 9 விருதுகளைப் பெற்றுள்ளது ஆடு ஜீவிதம். ஆனாலும், "படத்தின் இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு விருது அளிக்கப்படாதது அவமானம்" எனப் பேசியிருந்தார் இயக்குநர் ப்ளஸ்ஸி.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...