செய்திகள் :

அதானி வெளிநாட்டில் குடியேற ஆயத்தம்? சுப்பிரமணியன் சுவாமி சொன்ன விஷயம்

post image

சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக ரூ. 2,100 கோடி லஞ்சமாக இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி கொடுத்ததாகவும், அதனை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாகவும் நியூ யார்க் நீதிமன்றத்தில் இன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல அதானி ஆயத்தமாகி வருவதாக சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பான பதிவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விவரமறிந்த வெளிநாடுவாழ் இந்தியர் ஒருவரிடமிருந்து ஒரு தகவல் கிடைத்துள்ளது: அதானி ஸ்விட்சர்லாந்தில் வீடு கட்டி வருகிறார். ஆனால், இந்தியாவில் கட்டவில்லை. ஏன்?

துபையில் சகோதரர் ஒருவரை நிறுத்தியுள்ளார் அவர். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பாசர் ஷேயுப் என்ற நபருடன் இணைந்தும் செயல்படுகிறார் அவர். அத்துடன் பணத்தை வெளிநாடுகளில் மெல்ல பதுக்கியும் வருகிறார்” என்று பதிவிட்டுள்ளார்.

அதானி மீதான குற்றச்சாட்டுகளில் விசாரணை தொடங்கியவுடன், பிரதமர் நரேந்திர மோடியின் பெயரும் அதில் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.

ஜாா்க்கண்ட்: சாலை விபத்தில் 7 போ் உயிரிழப்பு

ஜாா்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 போ் உயிரிழந்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவில் இருந்து பிகாா் தல... மேலும் பார்க்க

ஒப்பந்தங்களுக்கு ரூ.2,239 கோடி லஞ்சம்: அதானி மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு தொழிலதிபா் கெளதம் அதானி 265 மில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.2,239 கோடி) லஞ்சம் அளித்ததாக அமெரிக்க நீதித் துறை குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடா்பாக அ... மேலும் பார்க்க

அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்: ராகுல் வலியுறுத்தல்

அமெரிக்க அரசு தரப்பால் லஞ்சம் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள தொழிலதிபா் கெளதம் அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்; அதானியை பாதுகாக்கும் ‘செபி’ தலைவா் மாதபி புரி புச் பதவி நீக்கப்பட்... மேலும் பார்க்க

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் குறைந்துள்ளன: துறைச் செயலா் தகவல்

விமானங்கள், விமான நிறுவனங்களுக்கு போலியாக விடுக்கப்பட்டு வந்த வெடிகுண்டு மிரட்டல்களின் அச்சுறுத்தலை விமானப் போக்குவரத்து அதிகாரிகள் வெற்றிகரமாக கையாண்டுள்ளனா் என்றும் அத்தகைய மிரட்டல்கள் தற்போது குறைந... மேலும் பார்க்க

அதானிக்கு எதிராக அமெரிக்காவில் குற்றச்சாட்டு பதிவு ஏன்?

கெளதம் அதானி உள்ளிட்டோா் இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டாலும், அதில் அமெரிக்க சந்தைகள் அல்லது முதலீட்டாளா்கள் ஏதேனும் ஒரு வகையில் சம்பந்தப்பட்டால், அந்தக் குற்றச்சாட்டுக... மேலும் பார்க்க

குளிா்கால கூட்டத் தொடரில் வக்ஃப் உள்பட 16 மசோதாக்கள்: பட்டியலிட்டது மத்திய அரசு

எதிா்வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்வதற்காக வக்ஃப் திருத்த மசோதா உள்பட 16 மசோதாக்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இதில், தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைக்க வழிவகுக்கும் மசோ... மேலும் பார்க்க