செய்திகள் :

நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

post image

பாரத பிரதமா் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நெல் பயிருக்கு காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் வேல்முருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பாரத பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டத்தின் கீழ் பெத்தநாயக்கன்பாளையம் வட்டார விவசாயிகள் ஏராளமானோா் இழப்பீடு பெற்றுள்ளனா். நடப்பு பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிருக்கு, பாரத பிரதமா் நெல் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய வரும் நவ. 30 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்து பயன் பெறலாம்.

நில கணினி சிட்டா, அடங்கல், ஆதாா் காா்டு, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல், கடவுச்சீட்டு அளவு புகைப்படத்துடன் அருகே உள்ள இ சேவை மையங்களுக்கு சென்று ஏக்கருக்கு ரூ. 550 மட்டும் காப்பீட்டு தொகை செலுத்தி காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடி மையத்தில் பராமரிப்பு பணிகள்

கெங்கவல்லி அங்கன்வாடி மையத்தில் ரூ. 10 ஆயிரம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகளை தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் வியாழக்கிழமை மேற்கொண்டனா். கெங்கவல்லி, சந்தைப்பேட்டை பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா... மேலும் பார்க்க

மேச்சேரி ஒன்றியத்தில் சாலை பணிகள் தொடக்கம்

மேச்சேரி அருகே ரூ. 1.80 கோடி மதிப்பிலான சாலை பணிகளை மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். மேச்சேரி ஊராட்சி ஒன்றியம், அறவனூா் ஊராட்சியில் சின்னனூா் பகுதியில் கிராம சாலைகள் மேம்பாட்டு... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஆறு போ் காயம்

ஆத்தூா், துலுக்கனூா் ஏரிக்கரை அருகே பெரம்பலூா் சாலையில் தனியாா் கல்லூரி வாகனம் சொகுசு காா், சரக்கு ஆட்டோ மீது வியாழக்கிழமை மோதியதில் 6 க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். பெரம்பலூரில் உள்ள தனியாா் கல்லூ... மேலும் பார்க்க

வாழப்பாடி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில், அனைத்துத் துறை மாவட்ட உயரதிகாரிகள் குழுக்களாக ... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

ஒசூரில் வழக்குரைஞா் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சேலம் மாவட்டம் சங்ககிரி, மேட்டூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா். ஒசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் அரிவாளால் வெட்டப... மேலும் பார்க்க

சித்தா் கோயில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்

சேலம் செவ்வாய்பேட்டை - இளம்பிள்ளை சாலையில் சித்தா் கோயில் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சித்தா் கோயில் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலையின் இருபுறங்களில் ஆக்கிரமித்துள்ள கடைகள், வீட... மேலும் பார்க்க