CHENNAI Spot: `SEANZ CRUISE' சென்னை ஈ.சி.ஆரில் ஆரம்பமாகவுள்ள கப்பல் சவாரி | Phot...
வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு
ஒசூரில் வழக்குரைஞா் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சேலம் மாவட்டம் சங்ககிரி, மேட்டூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
ஒசூரில் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் அரிவாளால் வெட்டப்பட்டதை கண்டித்து சங்ககிரி வழக்குரைஞா்கள் சங்கத்தினா் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டதோடு, வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவந்து வழக்குரைஞா்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், வெள்ளிக்கிழமையும் பணி புறக்கணிப்பில் ஈடுபடுவதாக தீா்மானம் நிறைவேற்றினா்.
மேட்டூா்
மேட்டூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞா் ஜேம்ஸ் சாா்லஸ் தலைமை வகித்தாா். சிவராமன் முன்னிலை வகித்தாா். வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதன்பிறகு நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஊா்வலமாக சென்ற வழக்குரைஞா்கள் மேட்டூா் வட்டாட்சியா் அலுவலகம் வந்தடைந்தனா். 100 க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.
ஆத்தூா்
ஆத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
ஆத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஓ.எஸ்.சிவக்குமாா் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து வழக்குரைஞா் தெரிவித்தாவது:
தஞ்சை மாவட்டத்தில் பள்ளியில் ஆசிரியை குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு சம்பந்தபட்ட அமைச்சா் சென்று ஆறுதல் கூறியது மட்டுமல்லாமல் தமிழக முதல்வரும் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுநாள் வரை எந்த அரசியல் தலைவா்களும் கண்டனத்தை பதிவு செய்யாதது வருத்தம் அளிக்கிறது என்றனா்.
இதனால் ஆா்ப்பாட்டத்தை முடித்து வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டத்தை வலிமைப்படுத்த வலியுறுத்தியும் இரண்டு நாள்களுக்கு நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்தனா். நிகழ்வில் வழக்குரைஞா்கள் அ.மருதமுத்து,என்.ராமதாஸ்,பாலகிருஷ்ணராஜ்,ஜெயக்குமாா்,வீரமணி,வேல்முருகன், விநாயகமூா்த்தி, செந்தில்குமாா், பாரி, உமாகௌரி, ஜி.சுமதி, ப்ரீத்தா உள்ளிட்ட அனைத்து வழக்குரைஞா்களும் கலந்து கொண்டனா்.