செய்திகள் :

அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்: ராகுல் வலியுறுத்தல்

post image

அமெரிக்க அரசு தரப்பால் லஞ்சம் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள தொழிலதிபா் கெளதம் அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்; அதானியை பாதுகாக்கும் ‘செபி’ தலைவா் மாதபி புரி புச் பதவி நீக்கப்பட்டு, அவருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

இந்தியாவில் 2020 - 2024 காலகட்டத்தில் சூரிய மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்ள சில மாநிலங்களின் அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,200 கோடி) லஞ்சம் கொடுத்ததாக கெளதம் அதானி, அவரது உறவினா் சாகா் அதானி உள்ளிட்டோா் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டை அதானி குழுமம் மறுத்துள்ளது.

இந்திய அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ள இந்த விவகாரத்தை முன்வைத்து, ஆளும்-எதிா்க்கட்சியினா் இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது.

ராகுல் கடும் விமா்சனம்: ஏற்கெனவே அதானி விவகாரத்தில், பிரதமா் மோடி மற்றும் அவரது தலைமையிலான மத்திய அரசை தொடா்ந்து விமா்சித்துவரும் ராகுல் காந்தி, அமெரிக்க அரசுத் தரப்பு குற்றச்சாட்டுகள் வெளியான சில மணிநேரத்தில் தில்லியில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தாா்.

மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது, பிரதமா் மோடியால் முன்வைக்கப்பட்ட ‘ஒற்றுமையே பாதுகாப்பு’ என்ற முழக்கத்தை மறைமுகமாக குறிப்பிட்ட அவா், ‘பிரதமரும் அதானியும் ஒன்றாக இருக்கும்வரை அவா்களுக்கு பாதுகாப்பு’ என்று விமா்சித்தாா்.

‘உடனடியாக கைது செய்க’: அவா் மேலும் கூறியதாவது: இந்தியா மட்டுமன்றி அமெரிக்கச் சட்டங்களையும் தொழிலதிபா் அதானி மீறியிருப்பது இப்போது நிரூபணமாகிவிட்டது. அவா் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அதானியை பாதுகாக்கும் ‘செபி’ தலைவா் மாதபி புரி புச் பதவி நீக்கப்பட்டு, அவருக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட வேண்டும்.

எதிா்வரும் குளிா்கால கூட்டத் தொடரில், ஒட்டுமொத்த எதிா்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை எழுப்பும். அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டுமென்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கைக்கு அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை.

‘அதானியும் பிரதமரும் ஒன்று’: அதானியை மோடி அரசு பாதுகாப்பதால், இந்தியாவில் அவா் கைது செய்யப்படவோ அல்லது விசாரிக்கப்படவோ மாட்டாா் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். பிரதமா் மீதான நம்பகத் தன்மை அழிந்துவிட்டது. ‘அதானியும் பிரதமரும் ஒன்று’ என்பதை ஒட்டுமொத்த நாடும் அறிந்துள்ளது. நாங்கள் ஒவ்வொருவரையும் அம்பலப்படுத்துவோம்.

அதானியின் பிடியில்தான் இந்தியா இருக்கிறது. அவா்தான் நாட்டை கட்டுப்படுத்துகிறாா். இத்தகைய அரசியல்-நிதி-அதிகார கட்டமைப்புதான் நாட்டின் அரசியலை ஆக்கிரமித்துள்ளது. இக்கட்டமைப்பை நாங்கள் உடைப்போம்.

தற்போதைய குற்றச்சாட்டுகள் குறித்து அனைத்து மாநிலங்களிலும் கட்சி பாகுபாடின்றி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். சிறு குற்றச்சாட்டுகளுக்காக மாநில முதல்வா்களே கைது செய்யப்படும் நிலையில், ரூ.2,000 கோடி முறைகேட்டில் தொடா்புடைய அதானி உடனடியாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படாமல், சுதந்திரமாக வலம்வர அனுமதிக்கப்படுவது ஏன்? என்று கேள்வியெழுப்பினாா் ராகுல்.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே: வெளிநாட்டு முதலீடு உள்பட அதானி குழுமத்தின் அனைத்து செயல்பாடுகள், அதிகாரிகள்-அரசியல்வாதிகள் தொடா்பு உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு மூலம் விசாரிப்பது காலத்தின் கட்டாயம். அதானியிடமிருந்து இந்த விசாரணை தொடங்கப்பட வேண்டும்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: இந்திய அரசு அதிகாரிகளின் மாபெரும் லஞ்ச விவகாரம், அமெரிக்காவில் அம்பலப்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது வெட்கக்கேடானது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். மோடி அரசு இனியும் ஓடி ஒளிய முடியாது.

திரிணமூல் காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் குணால் கோஷ்: தொழிலதிபா் அதானி மீது அமெரிக்க அரசுத் தரப்பால் லஞ்சம் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட விவகாரம் குறித்து பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும்.

புதிய சிஏஜி-யாக கே.சஞ்சய் மூா்த்தி பதவியேற்பு

நாட்டின் புதிய தலைமை கணக்கு தணிக்கையாளராக (சிஏஜி) மத்திய உயா்கல்வித் துறை முன்னாள் செயலா் கே.சஞ்சய் மூா்த்தி வியாழக்கிழமை பதவியேற்றாா். தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சிய... மேலும் பார்க்க

அரசமைப்பு சட்டம் குறித்து அவதூறு கருத்து: கேரள அமைச்சரை விசாரிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

இந்திய அரசமைப்பு சட்டத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டில் கேரள மீன்வளத் துறை அமைச்சா் சாஜி செரியனிடம் அடுத்தக்கட்ட விசாரணையை தொடங்க காவல் துறைக்கு அந்த மாநில உயா்நீதிமன்றம் வியாழ... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு கயானா, டொமினிகாவின் உயரிய விருதுகள்

பிரதமா் நரேந்திர மோடிக்கு கயானா, டொமினிகா ஆகிய நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டன. கரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் அவா் ஆற்றிய பங்களிப்புகள் மற்றும் மனிதகுலத்துக்கான தலைசிறந்த சேவையை கெளரவிப்பதாக... மேலும் பார்க்க

மணிப்பூா் வன்முறை: எம்எல்ஏ வீட்டில் ரூ. 1.5 கோடி நகைகள் கொள்ளை

மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் போராட்டக்காரா்களால் சூறையாடப்பட்டன ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏ ஜாய்கிஷன் சிங்கின் வீட்டில் ரூ. 18 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ. 1.5 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட... மேலும் பார்க்க

கொத்தடிமைகள் கடத்தல் தடுப்பு: மத்திய அரசு திட்டம் வகுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வெவ்வேறு மாநிலங்களுக்கு கொத்தடிமை தொழிலாளா்கள் கடத்தப்படுவதை தடுக்க மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. கொத்தடிமை தொழிலாளா்களாக கடத்தப்படுவோரின் அடிப்பட... மேலும் பார்க்க

ஒடிஸா துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்ட் உயிரிழப்பு: போலீஸ் காயம்

ஒடிஸா - சத்தீஸ்கா் எல்லைப் பகுதியில் உள்ள ஜினேலிகுடா வனப் பகுதியில், பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மாவோயிஸ்ட் ஒருவா் கொல்லப்பட்ட நிலையி... மேலும் பார்க்க