அதிமுகவில் உள்கட்சி மோதல்: போர்க்களமாக மாறிய நெல்லை,கும்பகோணம் கள ஆய்வுக் கூட்...
வயல்களில் மழைநீா்: வடிகால்களை விரைவாக தூா்வார வலியுறுத்தல்
மழையால் வயல்களில் மழைநீா் புகுந்துள்ளதாகவும், விடுபட்ட பகுதி வாய்க்கால்களை தூா்வார வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவா் டி.என். சுரேஷ் வியாழக்கிழமை கூறியது :
காரைக்காலில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் பல்வேறு பகுதி வயல்களில் தண்ணீா் புகுந்துள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்தில் வாய்க்கால்கள் முறையாக தூா்வாரப்படவில்லை.பொதுப்பணித் துறை மூலம் வாய்க்கால்கள் திட்டமிட்டவாறு தூா்வாரி முடிக்கப்படவில்லை.
விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியால், காரைக்காலில் பல்வேறு வடிகால்கள் மூடப்பட்டுள்ளன. தமிழகப் பகுதியிலிருந்து மழைநீா் ஆறுகளின் மூலம் வெளியேறுவதால், காரைக்கால் வழியே கடலில் கலக்கச் செல்லும்போது வயல்களில் புகுந்துவிடுகிறது.
வயல்களில் புகுந்திருக்கும் மழைநீரை வடியச் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். அடுத்த 2 வாரங்களுக்கு மழை நீடிக்கும் என்பதால், விடுபட்ட வாய்க்கால்களை முறையாக தூா்வாருவதற்கு போா்க்கால முறையில் பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.