செய்திகள் :

பும்ரா அசத்தல்: முதல்முறையாக கோல்டன் டக் அவுட்டான ஸ்டீவ் ஸ்மித்!

post image

ஆஸி.க்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டி இன்று காலை பெர்த் ஆடுகளத்தில் நடைபெறும் தொடங்கியது.

கேப்டன் ரோஹித் சர்மா முதல் போட்டியில் பங்கேற்காத நிலையில், பும்ரா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது.

49.4 ஓவர்களில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்திய அணி. அடுத்து விளையாடிவரும் அஸி. அணி 15 ஓவர் முடிவில் 37/4 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

இதில் இந்தியாவின் கேப்டன் ஜஸ்ப்ரீத் பும்ரா 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

ஆஸி.யின் தலைசிறந்த பேட்டர் ஸ்டீவ் ஸ்மீத் முதல்முறையாக சொந்த மண்ணில் கோல்டன் டக் அவுட் ஆகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளார்.

110 போட்டிகளில் 9,685 ரன்கள் எடுத்துள்ளார். சமீபகாலமாக ஃபார்மில் இல்லாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கோலி கேட்ச் விட்டதால் லபுஷேன் இன்னமும் விளையாடிக்கொண்டிருக்கிறார். அதிரடி மன்னன் டிராவிஸ் ஹெட் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பௌன்சர்களை தோளில் வாங்கிக்கொள்; கௌதம் கம்பீரின் அறிவுரையை நினைவுகூர்ந்த நிதீஷ் குமார் ரெட்டி!

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் தொடங்குவற்கு முன்பாக கௌதம் கம்பீர் கொடுத்த அறிவுரையை அறிமுக வீரர் நிதீஷ் குமார் ரெட்டி நினைவு கூர்ந்துள்ளார்.கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த இந்... மேலும் பார்க்க

“உலகின் சிறந்த வீரர்...” ஜஸ்பிரித் பும்ராவை பாராட்டிய முன்னாள் வேகப் பந்துவீச்சாளர்!

உலகின் சிறந்த வீரர் ஜஸ்பிரித் பும்ரா என முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் அவரைப் பாராட்டியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் இ... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: பிளேயிங் லெவனை அறிவித்த மே.இ.தீவுகள்!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.வங்கதேச அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் ... மேலும் பார்க்க

நியூசி. அணி நன்றாக விளையாடியது; இலங்கை தலைமைப் பயிற்சியாளர் பாராட்டு!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடியதாக இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா பாராட்டியுள்ளார்.நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்க... மேலும் பார்க்க

பந்து தாக்கி பலியான ஆஸி.வீரர் பிலிப் ஹூயூஸுக்கு அடிலெய்ட் டெஸ்ட்டில் சிறப்பு மரியாதை!

பந்து தாக்கி பலியான ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹூயூஸ் நினைவாக சிறப்பு மரியாதை செலுத்தப்படவுள்ளது.2014 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி சிட்னியில் நடந்த உள்ளூர் கிக்கெட் போட்டியில் சீன் அப்போர்ட் வீசிய பந்து... மேலும் பார்க்க

72 ஆண்டுகளுக்குப் பிறகு... பெர்த் டெஸ்ட்டில் உடைக்கப்பட்ட வரலாறு!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 72 ஆண்டுகால வரலாறு உடைக்கப்பட்டுள்ளது.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர... மேலும் பார்க்க