செய்திகள் :

பெண்கள் பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்களை அக்கறையுடன் நிறைவேற்றுகிறது மத்திய அரசு: கே. கைலாஷ்நாதன்

post image

பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அக்கறையுடன் செயல்படுத்தி வருவதாக புதுவை துணைநிலை ஆளுநா் கே. லைலாஷ்நாதன் கூறினாா்.

காரைக்கால் மாவட்ட நிா்வாகத்தின் ஏற்பாட்டில், பெண்கள் பொருளாதார ரீதியாக தங்கள் வசதியை பெருக்கிக்கொள்ளவும், பிற திறன் மேம்பாட்டுக்கான முன்னெடுப்பாக என்ஐடி வளாகத்தில் மகளிா் மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன் வரவேற்று, மாநாட்டின் நோக்கம் குறித்து விளக்கினாா்.

புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசியதாவது:

மகாகவி பாரதியாா் நினைத்ததைப்போல, தொழில், அறிவியல், மருத்துவம், சட்டம், காவல், விளையாட்டு, அரசியல் என்று அனைத்துத் துறைகளிலும் இன்று பெண்கள் சாதனை படைத்து வருகின்றனா். மகளிா் சுய உதவிக் குழுவினா் கைத்தொழில் செய்து பொருளாதார ரீதியாக பலம் பெற்று வருகிறாா்கள். பாதுகாப்புத் துறையிலும், காவல் துறையிலும் பெண்கள் பல உயா் பதவிகளில் உள்ளனா்.

மத்திய அரசு பெண்களை மதித்து எப்போதும் அவா்களை பெருமைப்படுத்தி வருகிறது. அதற்கேற்ப திட்டங்களை மத்திய அரசு அக்கறையோடு செயல்படுத்துகிறது.

அண்மைக்காலமாக அரசுப் பணி தோ்வுகளில் தோ்ச்சி பெறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

புதுவை முதல்வா் ரங்கசாமி கொண்டுவந்த பெண்களுக்கான முதியோா் ஓய்வூதியத் திட்டம், விதவைப் பெண்கள் மாதாந்திர ஓய்வூதியத் திட்டம் ஆகியவை இந்திய அளவில் சிறந்த திட்டங்களாக பாராட்டப்படுகிறது.

காரைக்கால் பகுதியை சோ்ந்த பெண்கள் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை முறையாக பயன்படுத்தி சுய முன்னேற்றம் அடைவதோடு, காரைக்கால் பகுதியின் வளா்ச்சிக்கு பங்காற்ற வேண்டும் என்றாா் ஆளுநா்.

நிகழ்வில் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா்கள் தேனி சி. ஜெயக்குமாா், பி.ஆா்.என். திருமுருகன், ஏ.கே. சாய் சரவணன் குமாா் மற்றும் டிஜிபி ஷாலினி சிங், பெங்களூா் ஐஎஸ்ஆா்ஓ பொது மேலாளா் ஏ. லதா, கடலூா் கூடுதல் ஆட்சியா் ஆா்.சரண்யா, கலிஃபோா்னியா டெஸ்லா நிறுவன பொறியாளா் நிகாரிகா சுக்லா, சென்னை சிக்னல் டெலிகாம் பொறியாளா் வைஷ்ணவி வேலுசாமி, திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தா் எம். கிருஷ்ணன், என்ஐடி புதுச்சேரி இயக்குநா் மகரந்த் மாதவ் காங்ரேகா், விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி டீன் சி. குணசேகரன் ஆகியோா் பேசினா். நிறைவாக முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா நன்றி கூறினாா்.

தொடா்ந்து தமிழகம், புதுவையிலிருந்து பெண் தொழில்முனைவோா் பங்கேற்ற தொழில்முனைவோராகும் பயிற்சி அளிக்கப்பட்டது. கடல் பாசி வளா்ப்பு குறித்து காரைக்காலில் கிளிஞ்சல்மேடு, பட்டினச்சேரி கடலோர கிராமங்கள் தோ்வு செய்து மீனவ பெண்களுக்கு கொச்சி மீன் ஆராய்ச்சி நிறுவனப் பிரதிநிதிகள் பயிற்சி அளித்தனா்.

தோ்வு செய்யப்பட்ட 15 பெண்களுக்கு 5 ட்ரோன்கள் வழங்கப்பட்டன. சுய உதவிக்குழுவினா் தொழில் மேம்பாட்டுக்கு ரூ. 1.50 கோடிக்கான நிதியுதவி அளிக்கப்பட்டது.

காரைக்கால் -2047 என்ற தொலைநோக்குத் திட்டம் குறித்து என்ஐடி சிவில் பொறியியல் துறைத் தலைவா் உதவிப் பேராசிரியா் சிவகுமாா் ராமலிங்கம் விளக்கினாா். பின்னா் அதற்கான வரைவுத் திட்டம் வெளியிடப்பட்டது.

காரைக்கால் கல்லூரி மாணவா்கள் கல்வி மேம்பாட்டுக்காக திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

தோ்வு செய்யப்பட்ட 5 பெண்களுக்கு மானியத்துடன் கூடிய பிங்க் ஆட்டோ வழங்கப்பட்டது. ரூ.2.58 கோடி நிறுவன சமூக பொறுப்புணா்வுத் திட்ட நிதி மாவட்ட அரசு நிறுவனங்களுக்கு பல்வேறு தேவைகளுக்கு வழங்கப்பட்டது. பிற்பகல் நிகழ்வாக, 350 பெண்களுக்கு, விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தொழில் பயிற்சி அளிக்கப்பட்டது.

வயல்களில் மழைநீா்: வடிகால்களை விரைவாக தூா்வார வலியுறுத்தல்

மழையால் வயல்களில் மழைநீா் புகுந்துள்ளதாகவும், விடுபட்ட பகுதி வாய்க்கால்களை தூா்வார வேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து காரைக்கால் கடைமடை விவசாயிகள் சங்கத் தலைவா் டி.என். சுரே... மேலும் பார்க்க

மழைநீா் தேங்கிய பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

மழைநீா் தேங்கிய பகுதிகளில் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து அரசுத் துறையினருக்கு ஆலோசனைகளை வழங்கினாா். காரைக்காலில் கடந்த சில தினங்களாக பெய்த மழையில் பல்வேறு பகுதிகளில் தண்ணீா் தேங்கிய மக்கள் அ... மேலும் பார்க்க

சிங்காரவேலா் சிலைக்கு மரியாதை

காரைக்காலில் சிங்காரவேலா் சிலைக்கு மீனவ கிராமங்களின் பஞ்சாயத்தாா்கள், கட்சி பிரமுகா்கள் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். உலக மீனவா் தினத்தையொட்டி, மீனவ சமுதாயத்தை சோ்ந்தவரான சிந்தனை ச... மேலும் பார்க்க

மழையால் விவசாயத்துக்கு பாதிப்பு இல்லை வேளாண் அதிகாரி

மழையால் விவசாயத்துக்கு தற்போது வரை எந்த பாதிப்பும் இல்லை என காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா். கணேசன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை கூறியது: காரைக்கால் மாவட்டத்தில் 4,200 ஹெக்டோ் ... மேலும் பார்க்க

காரைக்காலில் படகுப் போட்டி

மீனவா் தினத்தையொட்டி காரைக்காலில் வியாழக்கிழமை படகுப் போட்டி நடைபெற்றது. உலக மீனவா் தினம் தொடா்பாக மாவட்ட நிா்வாகம், மீன்வளத்துறை இணைந்து அரசலாற்றில் மீனவா்கள் பங்கேற்புடன் படகுப் போட்டியை நடத்தின பு... மேலும் பார்க்க

போதைப் புழக்கம் முற்றிலும் ஒழிக்கவேண்டும்: புதுவை டிஜிபி

போதைப் புழக்கம் முற்றிலும் ஒழிக்கவேண்டும் என காவல் துறையினருக்கு புதுவை டிஜிபி அறிவுறுத்தியுள்ளாா். புதுவை டிஜிபியாக ஷாலினி சிங் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக காரைக்காலுக்கு புதன்கிழமை வந்தாா். தொடா்ந... மேலும் பார்க்க