செய்திகள் :

``உடற்பயிற்சி செய்தாலும், நீண்ட நேரம் உட்கார்ந்தால் இதய நோய் வரலாம்'' - ஆய்வில் தகவல்!

post image

நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்கள் உடற்பயிற்சி செய்தாலும் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சமீபத்திய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

மருத்துவர் எஸிம் அஜுபோ (Ezim Ajufo) பாஸ்டனைச் சேர்ந்த இதவியல் நிபுணர். இவரது ஆய்வில் நாம் ஆரோக்கியமாக வாழ்வதற்காக டயட், உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலும் நாள் முழுவதும் அமர்ந்திருப்பது இதயநோய்களை உண்டாக்கக்கூடும் எனக் கண்டறிந்துள்ளார். "நாம் உடல் ரீதியான செயல்பாடுகளை மேற்கொள்வதில்லை என்றாலும் கூட நீண்ட நேரம் அமர்ந்திருப்பதையாவது குறைக்க வேண்டும்" என்கிறார் எஸிம் அஜிம்ஃபோ.

Heart

ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி என்ற இதழில் இந்த ஆய்வு வெளியாகியிருக்கிறது. 90,000 பேரிடம் ஆக்செலோமீட்டர்கள் பொருத்தி அவர்கள் அமர்ந்திருக்கும் போதும், பிற வேலைகள் செய்யும்போதும் ஏற்படும் உடலியல் மாற்றங்களை வைத்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

நீண்ட நேரம் அமர்ந்திருப்பது உடலுக்கு நல்லதல்ல என்ற கருத்து பொதுவாக இருக்கிறது. ஆனால் என்னென்ன பிரச்னைகள் எதனால் ஏற்படுகின்றன என்பதை துல்லியமாக அறிய முடியவில்லை. மேலும் ஒரு நாளில் எவ்வளவு நேரம் அமர்ந்திருப்பது மோசமானது என்பதை விளக்கும், வழிகாட்டு நெறிமுறைகளும் இல்லை. இதனால் இந்த தளத்தில் இன்னும் அதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட ஆய்வுகளில் தோராயமாக 10 மணிநேரத்துக்கும் மேல் அமர்ந்திருப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றனர்.

மனித உடல் நீண்டநேரம் நின்றபடி வேலை செய்யும் வகையில் பரிமாண வளர்ச்சி அடைந்துள்ளது. உங்கள் இதயமும் இதயமண்டலும் நிற்கும்போதுதான் சிறப்பாக செயல்படும். குடலும் செரிமான மண்டலமும் அவ்வாறே. நீங்கள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்கும்போது உங்கள் ஒட்டுமொத்த ஆற்றலும், உடலின் சகிப்புத்தன்மையும் அதிகரிக்கும்.

Physical Activity

ஆனால் உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கைமுறை உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கானது. நீண்ட நேரம் அமர்வது இதயநோய்கள், நீரிழிவுநோய், கழுத்து, தோல்பட்டை வலி, கணுக்கால் வீக்கம், கால் நரம்பு தொடர்பான பிரச்னைகள் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

எந்த வேலை செய்தாலும் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது மன நலனை பாதிக்கக்கூடியது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

அஜித்பவார் - சரத்பவார் மோதிய தொகுதிகளில் 70% வாக்குப்பதிவு... சர்க்கரை சாம்ராஜ்யம் யாருக்கு?

எப்போதும் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு.. மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் இம்முறை எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான போட்டி நிலவியது. இத்தேர்தலில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா இரண்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: முதல்வர் பதவிக்கு இப்போதே போட்டி... தேர்தல் முடிவு வருவதற்குள் மோதும் கூட்டணிகள்..!

முதல்வர் பதவிக்கு இப்போதே கடும் போட்டி...மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலையில் எண்ணப்படுகிறது. இத்தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே இரண்டு அணியிலும் முதல்வர் பதவிக்கு இப்போத... மேலும் பார்க்க

``பணி ஓய்வுபெற்றும் பல ஆண்டாக தொழிற்சங்க பொறுப்பு..!'' - மதுரை தொ.மு.ச-வுக்குள் கசமுசா..!

"ரிடையர்ட் ஆகி பல வருசமானாலும் யூனியன் பொறுப்பை கெட்டியாக பிடித்துக்கொண்டு அடுத்தவருக்கு வழிவிடாமல் அட்டகாசம் செய்கிறார்கள்" என்றுகொந்தளிக்கிறார்கள் அரசு போக்குவரத்துக் கழக திமுக தொழிற்சங்கத்தினர்.தமி... மேலும் பார்க்க

Doctor Vikatan: 20 வருடங்களாக நீரிழிவு, சமீபத்தில் மாரடைப்பு... மாற்று மருத்துவம் உதவுமா?

Doctor Vikatan: என் அம்மாவுக்கு 56 வயது. அவர் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக நீரிழிவு நோயாளியாகஇருக்கிறார். மூன்று வருடங்களுக்கு முன்பு அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தது. மருத்துவமனையில் அட்மிட் செ... மேலும் பார்க்க

``திமுகவிற்கு ராசி இல்லை, அதனால்...'' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

திருவள்ளூர் மாவட்டத்தில் அந்தப் பகுதியின் மத்திய கள‌ ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. அந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டிருந்தார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் , "தமிழ... மேலும் பார்க்க

America: ட்ரம்பிடம் பேசிய சுந்தர் பிச்சை; இணைப்பில் இருந்த எலான் மஸ்க் - தொடரும் நட்பு!

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவரின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர்களில் மிக முக்கியமானவர் டெஸ்லா நிறுவனர் எ... மேலும் பார்க்க