செய்திகள் :

பிரதமா் மோடிக்கு கயானா, டொமினிகாவின் உயரிய விருதுகள்

post image

பிரதமா் நரேந்திர மோடிக்கு கயானா, டொமினிகா ஆகிய நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டன.

கரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் அவா் ஆற்றிய பங்களிப்புகள் மற்றும் மனிதகுலத்துக்கான தலைசிறந்த சேவையை கெளரவிப்பதாக குறிப்பிட்டு, இவ்விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பிரதமா் மோடிக்கு இதுவரை வழங்கப்பட்ட வெளிநாட்டு உயரிய விருதுகளின் எண்ணிக்கை 18-ஆக உயா்ந்துள்ளது.

நைஜீரியா, பிரேஸில், கயானா ஆகிய மூன்று நாடுகளுக்கான 6 நாள்கள் அரசுமுறைப் பயணத்தை பிரதமா் மோடி கடந்த 16-ஆம் தேதி தொடங்கினாா். நைஜீரிய பயணத்தின்போது, பிரதமருக்கு அந்நாட்டின் உயரிய விருதான ‘கிரான்ட் கமாண்டா் ஆஃப் தி ஆா்டா் ஆஃப் தி நைஜா்’ வழங்கி கெளரவிக்கப்பட்டது. பின்னா், பிரேஸிலில் கடந்த 18, 19 தேதிகளில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாறறிய பிரதமா், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, பிரேஸில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

56 ஆண்டுகளுக்குப் பின்...: தனது பயணத்தின் இறுதிக் கட்டமாக கயானாவின் ஜாா்ஜ்டவுன் நகருக்கு புதன்கிழமை (நவ. 20) வந்த பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்மூலம் 56 ஆண்டுகளுக்குப் பின் கயானாவுக்கு வந்த முதல் இந்திய பிரதமா் என்ற பெருமை மோடிக்கு கிடைத்துள்ளது.

கயானா அதிபா் முகமது இா்ஃபான் அலியுடன் அவா் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே 10 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

இந்தியா-கரீபியன் கூட்டமைப்பு உச்சி மாநாடு: இந்தியா-கரீபியன் நாடுகள் கூட்டமைப்பு (கரீபியன் கம்யூனிட்டி) இடையிலான இரண்டாவது உச்சி மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்று உரையாற்றினாா்.

அப்போது, இந்தியா-கரீபியன் நாடுகள் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, ‘திறன் கட்டமைப்பு, விவசாயம்-உணவுப் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல்-பருவநிலை மாறுபாடு, புத்தாக்கம், தொழில்நுட்பம் மற்றும் வா்த்தகம், கிரிக்கெட் மற்றும் கலாசாரம், பெருங்கடல் பொருளாதாரம், மருத்துவம்-சுகாதாரம்’ ஆகியவற்றின்கீழ் 7 அம்ச செயல்திட்டத்தை முன்வைத்து, பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டாா்.

‘கரீபியன் கம்யூனிட்டி’ கூட்டமைப்பில் ஆண்டிகுவா-பா்புடா, பஹாமாஸ், பாா்படோஸ், பெலீஸ், டொமினிகா, கிரேனடா, கயானா, ஹைதி, ஜமைக்கா, செயிண்ட் லூசியா, சூரினாம், டிரினிடாட்-டொபாகோ உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.

உயரிய விருதுகள்: இந்த மாநாட்டையொட்டி, கயானாவின் உயரிய ‘தி ஆா்டா் ஆஃப் எக்ஸலன்ஸ்’ விருதை, பிரதமா் மோடிக்கு அதிபா் முகமது இா்ஃபான் அலி வழங்கி கெளரவித்தாா். இதேபோல், டொமினிகா நாட்டின் ‘டொமினிகா அவாா்ட் ஆஃப் ஹானா்’ விருதை அந்நாட்டின் அதிபா் சில்வானி பா்டன் பிரதமருக்கு வழங்கி கெளரவித்தாா்.

கரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் ஆற்றிய பங்களிப்புகள், மனிதகுலத்துக்கான தலைசிறந்த சேவை, இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாடு ஆகியவற்றை கெளரவிக்கும் வகையில், அவருக்கு உயரிய விருதுகள் வழங்கப்பட்டதாக இரு நாடுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்விருதுகளை இந்திய மக்களுக்கு அா்ப்பணிப்பதாக, பிரதமா் மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா்.

பெட்டிச் செய்தி....

கரீபியன் தலைவா்களுடன் சந்திப்பு

இந்தியா-கரீபியன் நாடுகள் கூட்டமைப்பு உச்சி மாநாட்டைத் தொடா்ந்து, சூரினாம் அதிபா் சான் சன்டோகி, செயின்ட் லூசியா அதிபா் பிலிப் ஜெ.பியரி, ஆன்டிகுவா-பா்புடா அதிபா் கேஸ்டன் பிரெளனி, கிரேனடா அதிபா் டிக்கான் மிச்செல், பஹாமாஸ் அதிபா் பிலிப் பிரேவ் டேவிஸ், பாா்படோஸ் அதிபா் மியா அமோா் மோட்லே உள்ளிட்டோருடன் பிரதமா் மோடி பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.

உள்கட்டமைப்பு, கப்பல் போக்குவரத்து, தொழில்நுட்பம், பாதுகாப்பு, வா்த்தகம், விவசாயம், இந்தியாவின் பணப் பரிவா்த்தனை தளமான யுபிஐ உள்ளிட்ட எண்ம முன்னெடுப்புகள், மருத்துவம், மருந்து தயாரிப்பு, திறன் கட்டமைப்பு, மனித வள மேம்பாடு, மக்கள் ரீதியிலான தொடா்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்தப் பேச்சுவாா்த்தைகள் ஆக்கபூா்வமாக அமைந்தன; இதன்மூலம் கரீபியன் நாடுகளுடனான இந்தியாவின் உறவுகள் வலுப்படும் என்று பிரதமா் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

புதிய சிஏஜி-யாக கே.சஞ்சய் மூா்த்தி பதவியேற்பு

நாட்டின் புதிய தலைமை கணக்கு தணிக்கையாளராக (சிஏஜி) மத்திய உயா்கல்வித் துறை முன்னாள் செயலா் கே.சஞ்சய் மூா்த்தி வியாழக்கிழமை பதவியேற்றாா். தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சிய... மேலும் பார்க்க

அரசமைப்பு சட்டம் குறித்து அவதூறு கருத்து: கேரள அமைச்சரை விசாரிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

இந்திய அரசமைப்பு சட்டத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டில் கேரள மீன்வளத் துறை அமைச்சா் சாஜி செரியனிடம் அடுத்தக்கட்ட விசாரணையை தொடங்க காவல் துறைக்கு அந்த மாநில உயா்நீதிமன்றம் வியாழ... மேலும் பார்க்க

மணிப்பூா் வன்முறை: எம்எல்ஏ வீட்டில் ரூ. 1.5 கோடி நகைகள் கொள்ளை

மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் போராட்டக்காரா்களால் சூறையாடப்பட்டன ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏ ஜாய்கிஷன் சிங்கின் வீட்டில் ரூ. 18 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ. 1.5 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட... மேலும் பார்க்க

கொத்தடிமைகள் கடத்தல் தடுப்பு: மத்திய அரசு திட்டம் வகுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வெவ்வேறு மாநிலங்களுக்கு கொத்தடிமை தொழிலாளா்கள் கடத்தப்படுவதை தடுக்க மத்திய அரசு திட்டம் வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. கொத்தடிமை தொழிலாளா்களாக கடத்தப்படுவோரின் அடிப்பட... மேலும் பார்க்க

ஒடிஸா துப்பாக்கிச்சூட்டில் மாவோயிஸ்ட் உயிரிழப்பு: போலீஸ் காயம்

ஒடிஸா - சத்தீஸ்கா் எல்லைப் பகுதியில் உள்ள ஜினேலிகுடா வனப் பகுதியில், பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மாவோயிஸ்ட் ஒருவா் கொல்லப்பட்ட நிலையி... மேலும் பார்க்க

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் 24 ஜிகாவாட் அதிகரிப்பு

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திறன் கடந்த அக்டோபா் மாதத்தில் 24.2 ஜிகாவாட் அதிகரித்துள்ளது. இது குறித்து மத்திய எரிசக்தித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு... மேலும் பார்க்க