மக்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: கார்கே, ராகுல் வேண்டுகோள்
"கூட்டணிக்கு சும்மா வர்றதில்ல; 20 சீட், ரூ.100 கோடி கேட்கிறாங்க" - போட்டுடைத்த திண்டுக்கல் சீனிவாசன்
திருச்சியில் நேற்று (நவம்பர் 19) அ.தி.மு.க கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,
"கடந்த 1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அ.தி.மு.க 53-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த 53 ஆண்டுகளில் 32 ஆண்டுகள் ஆட்சியிலிருந்திருக்கிறோம். கூட்டணி தொடர்பான விஷயங்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார். நம்முடைய கூட்டணிக்கு வர வேண்டும் என்றால் ரண வேதனை இருக்கிறது. யார் வந்தாலும் சும்மாவா வருகிறார்கள்? ஒரு 20 சீட் கொடுங்கள்.... ஒரு 50 கோடி கையில் கொடுங்கள். அல்லது ரூ.100 கோடி கொடுங்கள் என்று கேட்கிறார்கள். ஏதோ நெல், அரிசி விற்பது மாதிரி பேரம் பேசுகிறார்கள். நாம் எங்கே போவது?. இப்போது, அ.தி.மு.க-வுக்குதான் மார்க்கெட் போய்க் கொண்டிருக்கிறது.
எடப்பாடியாரைதான் மக்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று அந்த கட்சித் தலைவர்கள் கூறுகின்றனர். அப்போது ஏன் தலைவரே.. ரூபாயைக் குறைச்சிக்கக் கூடாதா என்று கேட்டால்.. இதை வைத்துத்தான் பிஸினஸ் நடத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். அந்த கொடுமையில் எடப்பாடி மாட்டிக்கொண்டு இருக்கிறார். கூட்டணிக்குப் பேசிக் கொண்டு இருக்கிறார். விரைவில் நல்ல செய்தி வரும். கள ஆய்வு என்பது நிர்வாகிகளை உற்சாகப்படுத்துவதுதான். ஆகவே, நிர்வாகிகள் தீவிரமாகச் செயல்பட்டு கட்சிக்கு வெற்றியைத் தேடித் தர வேண்டும்" என்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...
https://bit.ly/VaigainathiNaagarigam
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb