செய்திகள் :

பூர்வ ஜென்ம பரிகார பூஜை: எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு; திருவண்ணாமலையில் அரச இலை தீப வழிபாடு

post image

2024 டிசம்பர் 13-ம் நாள் வெள்ளிக்கிழமை ஐப்பசி திருக்கார்த்திகை தீபத்திருவிழா நன்னாளில் திருவண்ணாமலை கிரிவலத்தில் ஈசான்ய லிங்கத்துக்கு எதிரே அமைந்துள்ள ஸ்ரீஅம்மணி அம்மன் ஆலயத்தில் பூர்வ ஜென்ம பரிகார பூஜை நடைபெற உள்ளது.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

பூர்வ ஜென்ம பரிகார பூஜை

தமிழகத்தில் முன் ஜென்ம கர்ம தோஷங்களை போக்கும் ஆற்றல் கொண்டதாக 7 ஆலயங்கள் கருதப்படுகின்றன. அவை திருபுவனம், திருப்பாம்புரம், திருத்தேவன்குடி, திருவிடைமருதூர், வைத்தீஸ்வரன்கோவில், கும்பகோணம் ராமநாதசாமி கோயில், திருவண்ணாமலை அம்மணி அம்மன் கோயில். அம்மணி அம்மன் ஆலயத்தில் அரச இலை தீப வழிபாடு பூர்வ ஜென்ம பரிகார பூஜையாக அமையும் என்பது சித்தர்கள் வாக்கு.

அரச இலை தீப வழிபாடு ஏன் செய்ய வேண்டும்?

வாழ்க்கையில் துக்கமும் தோல்வியுமே மிஞ்சுகிறது. யாருக்கும் தொந்தரவு தராமல் வாழ்ந்தாலும் எனக்கு ஏன் இந்த கஷ்டம் என்று வருந்துகிறீர்களா! இதற்கெல்லாம் காரணம் பூர்வ ஜென்ம வினைகளாக இருக்கலாம். அதை நிவர்த்தி செய்து அதிர்ஷ்டமும் ஆரோக்கியமும் ஆயுள் பலமும் பெற ஸ்ரீஅம்மணி அம்மன் ஆலயத்தில் பூர்வ ஜென்ம பரிகார பூஜையில் பங்கு கொள்ளுங்கள். இதனால் வாழ்வின் சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது நம்பிக்கை. பதிவு செய்யும் ஒவ்வொருவரின் நலனுக்காகவும் ஒரு தீபம் ஏற்றி பரிகார வழிபாடு செய்யப்படும்.

யார் இந்த பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்?

அரச இலை தீப வழிபாடு

தொடர்ந்து நோயால் அவதிப்படுவோர், படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பவர், அடிக்கடி விரயச் செலவுகளால் அவதிப்படுவோர், எத்தனை சம்பாதித்தாலும் செல்வம் நிற்கவே இல்லையே என்று நினைப்பவர், திருமணத் தடை, பிள்ளைப் பேரு இல்லாதவர்கள், பித்ருக்களுக்கு முறையான வழிபாடு செய்யாதவர்கள், அறிந்தோ அறியாமலோ தவறுகள் செய்தவர், பிள்ளைகளால் கஷ்டப்படுவோர், தீயப் பழக்கங்களால் துன்பப்படும் நபர்கள் நிச்சயம் இந்த பூர்வ ஜென்ம பரிகாரத்தில் கலந்து கொள்ள வேண்டும். நீங்கள் படும் துன்பம் அனைத்துக்கும் உங்கள் பூர்வ ஜென்ம பாவம் கூட காரணமாக இருக்கலாம். அதை நிவர்த்தி செய்ய இந்த பூஜையே ஒரே வழி.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

அது என்ன அரச இலை தீப வழிபாடு!

மரங்களின் அரசன் என்பதால் அரச மரம் எனப்படுகிறது. இந்த மரத்தில் விஷ்ணு, பிரம்மா, சிவன் என மூவருமே உறைந்திருப்பதாக நம்பிக்கை. அரச மர குச்சிகளே ஹோமத்தில் சமித்துகளாக பயன்படுபவை. அரச மரக் கிளைகளே மங்கல காரியங்களில் ஊன்றப்படுகிறது. அரச மரக் காற்று உடலுக்கும் மனதுக்கும் தெம்பைத் தரக்கூடியது. அதனாலேயே பிள்ளை இல்லாத பெண்கள், அரச மரத்தைச் சுற்றி வருவது வழக்கமானது.

அரச இலைகள் விஷேசம் நிறைந்தவை. பூர்வ ஜென்ம பாவங்கள், சாபங்கள், தோஷங்கள் அனைத்தையும் நீக்க கூடியது அரச இலை. வில்வம், துளசி, அறுகம்புல் போல அரச இலையும் சிறப்பான பத்ரம் என்கிறது வேதம். அரச இலையால் ஈசனை அர்ச்சிக்க முன் வினைகள் யாவும் நீங்கும். அரச இலை மேல் தீபம் ஏற்றி வழிபட ஏழேழ் பிறவிகளிலும் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள், தோஷங்கள், சாபங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதிகம். இது சித்தர்கள் சொன்ன எளிய பரிகார பூஜை.

அம்மணி அம்மையார்

தூய அரச இலை மீது மண்ணாலான அகல் விளக்கு வைத்து நல்லெண்ணெய் இட்டு, அதில் திரியிட்டு விளக்கேற்றி சம்பந்தப்பட்டவர் பற்றிய விவரங்களைக் கூறி வேண்டுதலை எண்ணி விளக்கேற்ற நிச்சயம் அது பலிக்கும் என்பது சித்தர்கள் வாக்கு.

அம்மணி அம்மன் கோயிலில் ஏன்?

17ம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் வாழ்ந்து பலருக்கும் பல நன்மைகள் செய்து வந்தவர் அம்மணி அம்மாள் என்ற சித்த புருஷி. இவர் தொட்டதும் நோய் தீரும். இவர் பார்வை பட்டதும் தோஷங்கள் விலகும். இதனாலேயே பலரும் இவருக்கு உதவி செய்ய, திருவண்ணாமலையின் வடக்கு கோபுரத்தை 171 அடி உயரத்தில் இவர் கம்பீரமாக எழுப்பினார். என்றென்றும் தன்னை நாடி வரும் பக்தர்களின் துயர் தீர்ப்பேன் எனக்கூறி, கிரிவலப்பாதையின் முடிவில், ஈசான்ய லிங்கத்துக்கு எதிரில் ஒரு தைப்பூச நாளில் அம்மணி அம்மாள் ஸித்தி பெற்று அண்ணாமலையாரோடு கலந்தார். இவருடைய ஜீவசமாதி இன்றும் ஈசான்ய லிங்கத்துக்கு எதிரே வெகு சாந்நியத்தோடு விளங்கி வருகிறது. இங்கு கொடுக்கப்படும் விபூதி பிரசாதம் மகிமை மிக்க மாமருந்து. இங்கு வந்து கொஞ்ச நேரம் தியானித்தாலே உங்கள் பிரச்னைக்கான தீர்வு தியானத்தில் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

அற்புதமான இந்தக் கோயிலில் 2024 டிசம்பர் 13-ம் நாள் வெள்ளிக்கிழமை ஐப்பசி திருக்கார்த்திகை தீபத்திருவிழா நன்னாளில் பூர்வ ஜென்ம பரிகார பூஜை நடைபெற உள்ளது. இதனால் செல்வ வளம், கடன் பிரச்னை தீர்வு, வேலை-பதவி உயர்வு, வெளிநாட்டு வாய்ப்புகள், வியாபார விருத்தி, தொழில் வளர்ச்சி, குழந்தைகள் நலம், ஆரோக்கிய வாழ்வு, தோஷ நிவர்த்தி முதலான சகல பிரார்த் தனைகளையும் முன்வைத்து நிகழவுள்ளது. நீங்களும் முன்பதிவு செய்து பூஜையில் கலந்து கொண்டு அண்ணாமலையார் உண்ணாமுலையம்மை, அம்மணி அம்மாள் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்று வாழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

poorva jenma parihaara pooja qr code

poorva jenma parihaara pooja qr code

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான   சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, அட்சதை, மற்றும் விபூதி அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.  https://www.facebook.com/SakthiVikatan

துதிக்கையில் முத்தம்; செல்போனில் செல்ஃபி - திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியது எப்படி?

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும் கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயிலில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் தெய்வானை என்ற பெண் யான... மேலும் பார்க்க

'அசாம் டு திருச்செந்தூர்' - கோயில் யானை தெய்வானையின் பின்கதை!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும் கடற்கரை ஓரத் தலமுமானது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேஷ நா... மேலும் பார்க்க

திருமண வரமளிக்கும் ஸ்ரீலக்ஷ்மி நாராயண ஹோமம் - பெங்களூரு ஸ்ரீகைலாச வைகுந்த க்ஷேத்ரத்தில்!

திருமண வரமளிக்கும் ஸ்ரீலக்ஷ்மி நாராயண ஹோமம்! பெங்களூரு ஸ்ரீகைலாச வைகுந்த க்ஷேத்ரத்தில் 7-12-2024 சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொண்டு வேண்டிய வரனும் சிறப்பான இல்லறமும் அமைத... மேலும் பார்க்க

கார்த்திகை முதல் நாள் காவிரி நீராடலுக்கு இவ்வளவு சிறப்புகளா?கஷ்டங்கள் நீக்கும் துலா ஸ்நான மகிமைகள்

முடவன் முழுக்கு: கங்கையைப் போன்றே மயூரத்துக் காவிரியின் கரையில் செய்யப்பெறும் தவம், தானம், நீத்தார் கடன் முதலான புண்ணிய காரியங்களுக்கும் பலமடங்கு புண்ணிய பலன்கள் உண்டு. 'ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகுமா' ... மேலும் பார்க்க

திருமூலர் குருபூஜை: `வாழ்வில் பெரும் திருப்பங்கள் உண்டாக' - தினமும் தியானித்து வழிபட வேண்டியவர்

'ஐப்பசி-அசுவதி' - 14.11.2024 திருமூலர் குருபூஜை தினம்! தியானம் பயில்பவர்களுக்கும்: குருவருளை விழைபவர்களுக்கும் ஏற்றதோர் அருமையான சிவபூமி இது. இன்றளவும் அசுவினி நட்சத்திரத்தை உடையவர்கள் அந்நட்சத்திர நா... மேலும் பார்க்க