செய்திகள் :

டிசம்பர் 2 ஆவது வாரத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டம்..?

post image

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வருகிற டிசம்பர் 2 ஆவது வாரத்தில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் நிதிநிலை மானியக் கோரிக்கைகளுக்காக ஜூன் 20 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து நிதிநிலை அறிக்கைகள் மீதும் பல்வேறு கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினா்களின் விவாதம் நடைபெற்று முடிந்து, துறை சோ்ந்த சாா்ந்த அமைச்சா்களும் பதில் அளித்து உரையாற்றினா். அதையடுத்து பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

பேரவை விதிகளின்படி பேரவையின் ஒரு கூட்டம் முடிந்தால், அடுத்த 6 மாதங்களுக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், வரும் டிசம்பர் இறுதிக்குள் பேரவை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

இதையும் படிக்க |குரூப் 4 தோ்வு: சான்றிதழ் பதிவேற்றத்துக்கு நாளை கடைசி

இந்த நிலையில், வரும் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் பேரவை கூட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் பேரவை கூட்டம் நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரவைத் தலைவர் ஆஸ்திரேலியா சிட்னி நகரில் நடைபெற்ற 67 ஆவது காமன் வெல்த் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு தமிழகம் திரும்பியுள்ளார்.

இரண்டொரு நாள்களில் அவர் முதல்வருடன் ஆலோசித்துவிட்டு பேரவை கூட்டத்துக்கான தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என தலைமைச் செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கயல் தொடரில் பிகில் பட நடிகர்!

கயல் தொடரில் பிகில் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் விஜய் விஷ்வா நடிக்கவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கயல் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில வாரங்கள... மேலும் பார்க்க

தேர்தல் பிரசாரங்களை தொடங்குங்கள்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: இன்றுமுதல் தேர்தல் பிரசாரங்களை தொடங்குங்கள், துண்டுப் பிரசுரங்கள், திண்ணைப் பிரசாரங்கள் என மக்கள் இயக்கத்தை தொண்டர்கள் அனைவரும் தொடங்க வேண்டும் என திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தி... மேலும் பார்க்க

நடிகை கஸ்தூரி ஜாமீன் வழக்கை கருணையோடு அணுக வேண்டும்: நீதிபதி மனைவி முன்வைக்கும் காரணம் என்ன?

நடிகை கஸ்தூரி ஜாமீன் வழக்கை கருணையோடு அணுக வேண்டும் என சென்ன உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் மனைவி காமாட்சி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிககை கஸ்தூரி ஜாமீன... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாய தொழிலாளி பலி

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாய தொழிலாளி உயிரிழந்தார் . தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் மகன் தங்க ராஜா (55). விவசாய கூலித் தொழிலாளியா... மேலும் பார்க்க

காலிறுதியில் தோல்வி: கண்ணீருடன் விடைபெற்றார் ரஃபேல் நடால்!

டேவிஸ் கோப்பை காலிறுதிச் சுற்றில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஸ்பெயினின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால், டென்னிஸில் இருந்து தோல்வியுடன் விடைபெற்றார்.22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஸ்பெயின் ... மேலும் பார்க்க

சிஎம்டிஏ நிர்வாகத்தை கண்டித்து கோயம்பேடு வியாபாரிகள் திடீர் மறியல்

சென்னை: சென்னை கோயம்போடு காய்கறி சந்தைக்கு வாகனங்கள் வந்து செல்லக்கூடிய முக்கிய நுழைவு வாயில்களை பூட்டி சென்னை பெருநகர வளா்ச்சி குழும நிர்வாகம்(சிஎம்டிஏ) அட்டூழியம் செய்வதாக கோயம்பேடு வியாபாரிகள் புதன... மேலும் பார்க்க