செய்திகள் :

காலிறுதியில் தோல்வி: கண்ணீருடன் விடைபெற்றார் ரஃபேல் நடால்!

post image

டேவிஸ் கோப்பை காலிறுதிச் சுற்றில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஸ்பெயினின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால், டென்னிஸில் இருந்து தோல்வியுடன் விடைபெற்றார்.

22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஸ்பெயின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் நவம்பர் மாதம் நடக்கும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

இதையும் படிக்க..: ஓய்வை அறிவித்தார் ரஃபேல் நடால்..!

ரஃபேல் நடால் தனது கடைசி ஆட்டத்தில் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் டேவிஸ் கோப்பையில் 80-ஆம் தரவரிசையில் உள்ள வீரரான நெதர்லாந்தின் போடிக் வான் டி ஸாண்ட்ஸ்கல்ப்பிடம் தோல்வியடைந்தார். இதன்மூலம், ஸ்பெயின் காலிறுதியில் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

ஆட்டம் முடிந்ததும் ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து “ரஃபா... ரஃபா.. ரஃபா...” என்று கூச்சலிட்டனர். இதனால், ரஃபேல் கண்ணீர் விட்டு அழுது உணர்ச்சியை வெளிப்படுத்தினார்.


இதையும் படிக்க..: மகாராஷ்டிர தேர்தல்: அரசியல் தலைவா்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு!

டேவிஸ் கோப்பை போட்டியில் தொடர்ச்சியாக 29 ஒற்றையர் பிரிவில் வெற்றிகளைப் பெற்றுள்ள ரஃபேல் நடால், 2004, 2008, 2009, 2011 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஸ்பெயின் அணி டேவிஸ் கோப்பையை வெல்வதற்கு உறுதுணையாக இருந்தார்.

இதுவரை 14 பிரெஞ்சு ஓபன், 2 ஆஸ்திரேலியா ஓபன், 2 விம்பிள்டன், 4 அமெரிக்க ஓபன், 2008 கோடைகால ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம், 90 ஏடிபி தொடர் என பல்வேறு சாதனைகளை ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் படைத்துள்ளார்.

டேவிஸ் கோப்பையில் தனது முதல் போட்டியில் தோயுற்ற ரஃபேல் நடால், தனது கடைசி போட்டியிலும் தோற்று கண்ணீருடன் விடைபெற்றார்.

இதையும் படிக்க..: இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்: சௌரவ் கங்குலி கூறுவதென்ன?

நடிகை கஸ்தூரி ஜாமீன் வழக்கை கருணையோடு அணுக வேண்டும்: நீதிபதி மனைவி முன்வைக்கும் காரணம் என்ன?

நடிகை கஸ்தூரி ஜாமீன் வழக்கை கருணையோடு அணுக வேண்டும் என சென்ன உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் மனைவி காமாட்சி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிககை கஸ்தூரி ஜாமீன... மேலும் பார்க்க

டிசம்பர் 2 ஆவது வாரத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டம்..?

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் வருகிற டிசம்பர் 2 ஆவது வாரத்தில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் நிதிநிலை மானியக் கோரிக்கைகளுக்காக ஜூன் 20 முதல் 29 ஆம் தேதி வரை... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாய தொழிலாளி பலி

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாய தொழிலாளி உயிரிழந்தார் . தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் மகன் தங்க ராஜா (55). விவசாய கூலித் தொழிலாளியா... மேலும் பார்க்க

சிஎம்டிஏ நிர்வாகத்தை கண்டித்து கோயம்பேடு வியாபாரிகள் திடீர் மறியல்

சென்னை: சென்னை கோயம்போடு காய்கறி சந்தைக்கு வாகனங்கள் வந்து செல்லக்கூடிய முக்கிய நுழைவு வாயில்களை பூட்டி சென்னை பெருநகர வளா்ச்சி குழும நிர்வாகம்(சிஎம்டிஏ) அட்டூழியம் செய்வதாக கோயம்பேடு வியாபாரிகள் புதன... மேலும் பார்க்க

இயந்திரத்தில் சிக்கிய கை... மருத்துவமனையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!

சின்னத்திரை நடிகை சாய் காயத்ரியின் கை இயந்திரத்தில் சிக்கியதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் மஞ்சு ப... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2: சிஎம்ஆர்எல் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-II வழித்தடம் 4-ல் 8 கி.மீ. நீளத்திற்கு அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்(CMRL) தெரிவித்துள்ளது.இது தொடர... மேலும் பார்க்க