கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரம்: சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்!
கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாரயம் அருந்தியவர்களில் 190-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதில், 60-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு, மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமாரை இடமாற்றமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனாவை பணியிடை நீக்கமும் செய்து நடவடிக்கை எடுத்தது. மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் சிலரையும் கைது செய்தது. இதற்கிடையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்தது.
இந்த விவகாரத்தை கையில் எடுத்த பா.ஜ.க கூட்டணியுடன் தேர்தலை சந்தித்த பா.ம.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்த சம்பவத்தில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த நிலையில், பா.ம.க - பா.ஜ.க மனு மீதான விசாரணைக்குப் பிறகு, சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ-க்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...