செய்திகள் :

`எந்த மதமும் மாசுபாட்டை ஏற்படுத்தும் விதமாக எதையும் ஊக்குவிக்கவில்லை' - உச்ச நீதிமன்றம்

post image

காற்று மாசுபாடுகளால் பெரிதும் பாதிக்கப்படும் பகுதிகளில் டெல்லி எப்போதும் முன்னணியில் இருக்கும். அதனால், கடந்த மாதம் 14-ம் தேதி டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்து டெல்லி ஆம் ஆத்மி அரசு உத்தரவிட்டிருந்தது. அதைமீறி வெடி வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தது. இதை எதித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அதன் பிறகு நீதிபதிகள், ``அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின்படி, மாசு இல்லாத சூழலில் வாழ்வதற்கான உரிமை அடிப்படை உரிமையாகும்.

டெல்லி காற்றுமாசு | IQAir அறிக்கை

எந்த மதமும் மாசுபாட்டை ஏற்படுத்தும் விதமாகவோ, மக்களின் ஆரோக்கியத்துடன் சமரசம் செய்யும் எந்த செயலையும் ஊக்குவிப்பதில்லை என்று நாங்கள் கருதுகிறோம். அக்டோபர் 14-ம் தேதி டெல்லி அரசு பிறப்பித்த பட்டாசு தடையை அமல்படுத்த சிறப்புப் பிரிவை உருவாக்க வேண்டும். மேலும், இந்த தடை குறித்து அனைத்து பட்டாசு உற்பத்தியாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதா என்பது குறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் நவம்பர் 25-ம் தேதிக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.

ஆன்லைன் பட்டாசு விற்பனையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் அளிக்க வேண்டும். பட்டாசு தடையை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக சிறப்புப் பிரிவை அமைக்குமாறு டெல்லி போலீஸ் கமிஷனருக்கு நாங்கள் உத்தரவிடுகிறோம். தடையை அமல்படுத்துவதற்கு அவர்கள் எடுத்த நடவடிக்கைகளைப் பதிவு செய்து தனிப்பட்ட பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிடுகிறோம்," எனக் குறிப்பிட்டிருக்கிறது.

ஆண்டுக்கு ஒருமுறை 24 மணி நேரம் மூடப்படும் உயர் நீதிமன்றக் கதவுகள்... நடைமுறையின் பின்னணி இதுதான்!

உலகின் மிகப்பெரிய நீதிமன்ற வளாகங்களில் ஒன்றான சென்னை உயர் நீதிமன்றம், சுமார் 170 ஆண்டுகள் பாரம்பர்யமிக்கது .பிராட்வே, பாரிஸ் கார்னர், ரிசர்வ் வங்கி, மெட்ரோ ரயில் நிலையம், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரம்: சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்!

கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதி கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாரயம் அருந்தியவர்களில் 190-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதில், 60-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த விவகாரம் தமிழ்நாடு... மேலும் பார்க்க

`இளம் பருவத்தினர் காதலிக்கும்போது கட்டிப்பிடிப்பது குற்றமில்லை!' - உயர் நீதிமன்றம் சொல்வதென்ன?

கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த பிறகு, திருமணம் செய்ய மறுத்து விட்டார் எனக் காதலன் மீது இளம்பெண் ஒருவர் கொடுத்த புகாரில், குற்றப்பத்திரிகையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது.தூத்துக்குடி மாவட்... மேலும் பார்க்க

வரதட்சனை வழக்கு: பாஜக-வின் ஏ.பி.முருகானந்தத்துக்கு பிடி வாரன்ட்.. கோவை நீதிமன்றம் அதிரடி!

கோவை மாவட்டம், சாவடிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரசாமி . இவரது மகள் ஞான சௌந்தரிக்கும், பாஜக மாநில பொதுச் செயலாளராக உள்ள ஏ.பி. முருகானந்தத்துக்கும் 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.ஏ.பி.முருகானந்... மேலும் பார்க்க

காணாமல் போன தாத்தா வீடு... இப்போதும் தேடும் தலைமை நீதிபதி!? - வெளியான தகவல்!

இந்தியாவின் உயரிய பதவிகளில் ஒன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பொறுப்பு. 50-வது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சந்திரசூட்டின் பதவி காலம், கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிந்ததைத் தொடர்ந்து, ... மேலும் பார்க்க