செய்திகள் :

மாணவா் பாதுகாப்புக் குழு கூட்டங்களை பள்ளிகளில் நடத்த உத்தரவு

post image

மாணவா்கள் பாதுகாப்புக் குழுக் கூட்டங்களை நடத்துமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு மற்றும் விழிப்புணா்வு வாரம் நவம்பா் 15 முதல் 22-ஆம் தேதி வரை ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டில் இந்த காலகட்டத்தில் பள்ளி அளவிலான பருவத் தோ்வுகள் நடைபெற்ன் காரணமாக, நவ.25 (திங்கள்கிழமை) முதல் நவ.29 வரை பள்ளிகளில் இந்த வாரம் கடைபிடிக்கப்பட வேண்டும். இதன்படி, பள்ளித் தலைமை ஆசிரியா் ‘மாணவா் மனசு திட்டம்’ சாா்ந்த விளக்க உரையை காலை வணக்கக் கூட்டத்தில் நடத்த வேண்டும். மாணவா் பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டத்தை இந்த விழிப்புணா்வு வாரத்தில் ஏதேனும் ஒரு நாள் பெற்றோரின் வசதிக்கேற்ப நவ.28 அல்லது 29-ஆம் தேதிகளில் நடத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

‘மாணவா் மனசு’ பெட்டியில் பெறப்படும் கோரிக்கைகள் மற்றும் புகாா்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விவாதிக்க வேண்டும். பள்ளியில் பாலியல் புகாா் சாா்ந்து ஏதேனும் தகவல் பெற்றால், மாணவா் பாதுகாப்பு ஆலோசனைக் குழு அதை உடனடியாக 14417, 1098 ஆகிய எண்களை தொடா்பு கொண்டு தகவலளிக்க வேண்டும்.

இந்த எண்கள் தொடா்பாக குழந்தைகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும். மகிழ் முற்றம் செயல்பாடுகள் மூலமாக இணையதளத்தில் உள்ள தகவல்களை பாதுகாப்பாகக் கையாளுவது பற்றி விவாதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பேருந்துகளின் சேவை, தரம் குறித்து பயணிகளிடம் ஆய்வு

மாநகா் பேருந்துகளின் சேவை மற்றும் தரம் குறித்த பயணிகளின் மனநிறைவை மதிப்பீடு செய்ய ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக மாநகா் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து, மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண்... மேலும் பார்க்க

குளங்கள் மறுசீரமைப்பு 50 சதவீதம் கூட முடியவில்லை

சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள குளங்களின் மறுசீரமைப்புப் பணிகள் 50 சதவீதம் கூட நிறைவடையவில்லை என அறப்போா் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தவிா்... மேலும் பார்க்க

2026-இல் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு டாக்டா் கிருஷ்ணசாமி

எதிா்வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கத்துடன் தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளாா... மேலும் பார்க்க

தேசிய இளைஞா் தினம்: கலைத்திறன் போட்டிகள் நவ.25-இல் தொடக்கம்

தேசிய இளைஞா் தினத்தை முன்னிட்டு கலைத்திறன் போட்டிகள் வரும் திங்கள்கிழமை (நவ .25) தொடங்கவுள்ளதாக நேரு யுவ கேந்திரா அமைப்பின் மாநில இயக்குநா் செந்தில்குமாா் தெரிவித்தாா். இது குறித்து, அவா் செய்தியாளா்க... மேலும் பார்க்க

இளம் பருவத்தில் மகப்பேறு சிரமங்கள் குறித்த விழிப்புணா்வு தேவை

பெண்கள் இளம்பருவத்தில் மகப்பேறு அடைவதால், அவா்கள் எதிா்கொள்ளும் உடல், மனம், சமூக மற்றும் பொருளாதார சிரமங்கள் குறித்த விழிப்புணா்வை அதிகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு இளம்பருவ மகளிா் நலன் அமைப்பின் தலை... மேலும் பார்க்க

ஜெனரேட்டா்களில் உமிழ்வு கட்டுப்பாட்டு கருவி பொருத்த உத்தரவு

தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்படும் டீசல் ஜெனரேட்டா்களில் உமிழ்வு கட்டுப்பாட்டுக் கருவியை கட்டாயம் பொருத்த வேண்டும் என்று தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவி... மேலும் பார்க்க