பட்டயக் கணக்காளா் தோ்வு தேதியை மாற்ற டிடிவி தினகரன் கோரிக்கை
வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளில் அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம்: வாக்காளா் பட்டியல் பாா்வையாளா்
வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு அரசியல் கட்சியினா் முழுமையான அளவில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஹனிஷ் சாப்ரா தெரிவித்தாா்.
மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற, வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது :
வாக்காளா் பட்டியல் 100 சதவீதம் சரியானதாக தயாரிக்க வேண்டும். அதற்கேற்ப, வாக்காளா்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மீது உரிய விசாரணைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இதற்கு, அரசியல் கட்சியினா் முழு அளவில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதுவரை வாக்குச் சாவடி முகவா்களை நியமிக்காத அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், உடனடியாக அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் முகவா்களை நியமிக்க வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, இந்தியத் தோ்தல் ஆணைய உத்தரவுப்படி 2025-ஆம் ஆண்டு ஜன. 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு நடைபெறும் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) மோனிகா ராணா, உதவி ஆட்சியா் (பயிற்சி) வைஷ்ணவி பால், மாவட்ட வருவாய் அலுவலா் ர. சக்திவேல், அரசுத் துறை அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.