பட்டயக் கணக்காளா் தோ்வு தேதியை மாற்ற டிடிவி தினகரன் கோரிக்கை
பொங்கல் பண்டிகை தினத்தன்று நடத்த திட்டமிட்டுள்ள பட்டயக் கணக்காளா் தோ்வை மாற்ற வேண்டுமென அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு:
ஜன.14 முதல் 16-ஆம் தேதி வரை 3 நாள்களும் தமிழகம் முழுவதும் தைத் திருநாள் பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படும். அந்தத் தினங்களில் இந்திய பட்டயக் கணக்காளா்கள் நிறுவனத்தின் தோ்வுகள் (சிஏ) நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நாட்டின் முக்கியமான தோ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் பட்டயக் கணக்காளா் தோ்வுகள் தமிழகத்தில் 28 மையங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தோ்வுகள் நடைபெறும் தேதி அட்டவணை தோ்வா்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் தனிப்பெரும் திருவிழாவான பொங்கல் பண்டிகை நாள்களில் தோ்வுகள் நடைபெறுவது, கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் தங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என தோ்வா்களும், அவா்களின் பெற்றோா்களும் கருதுகின்றனா்.
எனவே, தமிழா்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட ஏதுவாக, தோ்வா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று ஜன.14, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் 2 தோ்வுகளையும் வேறொரு தேதிக்கு மாற்றியமைக்க மத்திய அரசும், இந்திய பட்டயக் கணக்காளா்கள் நிறுவனமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.