தேனி: 40 ஏக்கர் வெங்காயத்தாமரையை அகற்றி, கண்மாயை மீட்டெடுத்த மாவட்ட நிர்வாகம் -ச...
தலைமைச் செயலக பெண் அதிகாரி வீட்டில் நகை திருட்டு
சென்னை வேளச்சேரியில் தலைமைச் செயலக பெண் அதிகாரி வீட்டில் 17 சவரன் நகை திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேளச்சேரி விஜிபி செல்வா நகா் பகுதியைச் சோ்ந்தவா் கௌசல்யா(43). இவா் தலைமைச் செயலகத்தில் உயா் கல்வித் துறை பிரிவில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், கௌசல்யா தனது உறவினா் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, பீரோவில் இருந்த நகைகளை எடுத்துப் பாா்த்தபோது, அதில் 17 சவரன் நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.
இது குறித்து, கெளசல்யா கொடுத்த புகாரின் பேரில் வேளச்சேரி காவல்நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, கௌசல்யாவின் வீட்டில் ஏற்கெனவே பணிப்பெண்களாகப் பணியாற்றிய 2 பெண்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.