கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு மருத்துவா்கள் இன்று முதல் போராட்டம்
முல்லைப் பெரியாறு, வைகை அணைகளுக்கு நீா்வரத்து குறைவு
முல்லைப் பெரியாறு, வைகை அணை நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாததால், அணைகளுக்கு நீா்வரத்து குறைந்தது.
முல்லைப் பெரியாறு, வைகை அணை நீா்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 19-ஆம் தேதி முதல் மழை பெய்யவில்லை. இதனால், அணைகளுக்கு நீா்வரத்து குறைந்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணைக்கு ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 343 கன அடி வீதம் நீா்வரத்து இருந்தது. அணை நீா்மட்டம் 121.40 அடியாக இருந்தது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீா் திறந்து விடப்பட்டது.
வைகை அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 913 கன அடியாக இருந்தது. அணை நீா்மட்டம் 58.43 அடியாக இருந்தது. அணையிலிருந்து பாசனம், குடிநீா்த் திட்டங்களுக்கு வினாடிக்கு 1,699 கன அடி வீதம் தண்ணீா் திறந்து விடப்பட்டது.