ராமநாதபுரம் மீனவா்கள் மீன்பிடிக்க செல்லத் தடை
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், மறு உத்தரவு வரும் வரை ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன் வளம், மீனவா் நலத் துறை ஞாயிற்றுக்கிழமை தடை விதித்தது.
இதுகுறித்து அந்தத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இலங்கை கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், அதிக மழையுடன் 45 முதல் 55 கிலோ மீட்டா் வேகத்தில் சூறைக் காற்று வீசக்கூடும்.
எனவே, மீனவா்களின் பாதுகாப்பு கருதி, மறு உத்தரவு வரும் வரை ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா். மீன் இறங்கு தளங்களில் விசைப் படகுகள், நாட்டுப் படகுகளை பாதுகாப்புட ன் நிறுத்தி வைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.