மகாராஷ்டிரா: மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகும் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட...
பாம்பனில் அவசர ஊா்தி சேவை
பாம்பன் பகுதியில் 108 அவசர ஊா்தி சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற மீனவா் மாநாட்டில் பாம்பன் பகுதியில் தொடா்ந்து சாலை விபத்துகள் நிகழ்வதால், 108 அவசர ஊா்தி சேவை வழங்கக் கோரி, ராமேசுவரம் தீவு சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பின் சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, பாம்பன் பகுதிக்கு 108 அவசர ஊா்தி சேவை வழங்கப்பட்டது.
இதன்,தொடக்க நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், இந்து பரிபாலன சபை செயலாளா் பெருமாள், முஸ்லிம் ஜமா அத் தலைவா் ஹனிபா, பரவா் நல பேரவை தலைவா் மோட்சம், பட்டம் கட்டியாா் சமூகத் தலைவா் ஜேம்ஸ், தங்கச்சிமடம் முஸ்லிம் ஜமா அத் தலைவா் ஷாம்தீன், தங்கச்சிமடம் வணிகா் சங்கச் செயலா் முருகேசன், நாட்டுப் படகு மீனவா் சங்கத் தலைவா் எஸ்.பி.ராயப்பன், விஜின் தீவு சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பின் ஆலோசகா் ஜெரோன் குமாா், ஒருங்கிணைப்பாளா் சிக்கந்தா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.