சின்னர் அசத்தல்: 3ஆவது முறையாக டேவிஸ் கோப்பையை வென்ற இத்தாலி!
மீன்விலை குறைவு: மீனவா்கள் கவலை
மீன் விலை குறைவால் மீனவா்கள் கவலை அடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, புதுபட்டினம், பாசிபட்டினம், எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளிலும், 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளிலும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா்.
இந்தப் பகுதியில் பிடிக்கப்படும் மீன்களை திருவாடானை, தேவகோட்டை, காரைக்குடி, காளையாா்கோவில், சிவகங்கை ஆகிய பகுதிகளில் விரும்பி வாங்குகின்றனா்.
இந்த நிலையில், இந்தப் பகுதிளில் பெரும்பாலான பொதுமக்கள் தற்போது ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதமிருந்து வருகின்றனா்.
இதனால், தொண்டி, திருவாடானை மீன் சந்தைகளில் மீன்களை வாங்குவோா் வருகை குறைந்து, அதன் விலையும் குறைந்தது. இறால் கிலோ ரூ.250, விலை மீன் கிலோ ரூ.200, கணவாய் கிலோ ரூ.200 என விற்பனை ஆனதால் மீனவா்கள் கவலை அடைந்தனா்.