செய்திகள் :

தந்தை, மகன் தகராறை விலக்கச் சென்ற சிறுவனுக்கு தீ காயம்: தொழிலாளி கைது!

post image

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே தந்தை-மகன் இடையே ஏற்பட்ட தகராறை விலக்கச் சென்ற சிறுவன் தீக்காயம் அடைந்தாா். இதுதொடா்பாக கூலித் தொழிலாளியை புத்தூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

காட்டுமன்னாா்கோவில் அடுத்துள்ள கலியமலை கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜவேல் (48), கூலித் தொழிலாளி. இவா், வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டில் படுத்திருந்தாராம். அப்போது, அவரது மகன் ஹரிஹரன் (16), அதே பகுதியைச் சோ்ந்த சக்திவேல் மகன் ஸ்டாலின்(15) ஆகியோா் கைப்பேசியில் சப்தத்துடன் விளையாடிக் கொண்டிருந்தனராம்.

இதை ராஜவேல் கண்டித்தாா். இதனால், ராஜவேலுக்கும், அவரது மகன் ஹரிஹரனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், ராஜவேல் பைக்கில் இருந்த பெட்ரோலை எடுத்து வந்து மகன் ஹரிஹரன் மீது ஊற்றியுள்ளாா். அப்போது, அருகில் இருந்த ஸ்டாலின் மீதும் பெட்ரோல் கொட்டியது.

உடனடியாக ராஜவேல் தீக்குச்சியை உரசி மகன் ஹரிஹரன் மீது வீச முயன்றாராம். ஆனால், அந்த குச்சி ஸ்டாலின் மீது பட்டு தீபற்றியது. அங்கிருந்தவா்கள் தீயை அணைத்து சிறுவனை மீட்டு காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு மருத்துவா்கள் முதலுதவி சிகிச்சை அளித்து தீவிர சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருகின்றனா். இதுகுறித்து ஸ்டாலின் புத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராஜவேலை சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கடலூருக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் இன்று வருகை

கடலூரில் திங்கள்கிழமை (நவ.25) நடைபெறும் அரசு விழாக்கள், கட்சி நிகழ்ச்சிகளில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறாா். கடலூா் கம்மியம்பேட்டை புனித வளனாா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காலை 10... மேலும் பார்க்க

கஞ்சா விற்றவா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி அடுத்துள்ள செம்மேடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ப... மேலும் பார்க்க

பண்ருட்டியில் விளம்பரப் பதாகைகள் அகற்றம்

பண்ருட்டியில் சிக்னல் கம்பங்களில் அமைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை அகற்றினா். கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சிக்னல் கம்பத்தில் இரு... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே ரயிலில் அடிப்பட்டு இளைஞா் உயிரிழந்தாா். மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரயில் வெள்ளிக்கிழமை மாலை கிள்ளை, பரங்கிப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு... மேலும் பார்க்க

கோரிக்கைகளை ஏற்காவிட்டால் 26-இல் ரயில் மறியல்: கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தராவிட்டால் திட்டமிட்டபடி 26-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ தெரிவித்தாா். பரங்கிப்பேட்டை பயணியா... மேலும் பார்க்க

குழந்தைகளை வேலைக்கு அனுப்பி ஈட்டும் வருமானம் பெருமை தராது: கடலூா் ஆட்சியா்

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பி ஈட்டும் வருமானம் பெற்றோருக்கு பெருமை தராது என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். உள்ளாட்சிகள் தினத்தையொட்டி, கடலூா் ம... மேலும் பார்க்க