தேனி: 40 ஏக்கர் வெங்காயத்தாமரையை அகற்றி, கண்மாயை மீட்டெடுத்த மாவட்ட நிர்வாகம் -ச...
தேசிய பெண் குழந்தை தினத்தில் அரசின் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தேசிய பெண் குழந்தை தினத்தில் தமிழக அரசின் விருது பெறுவதற்கு சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம் ஜனவரி 24 இல் தேசிய பெண் குழந்தை தினத்தில் மாநில விருது வழங்கிட தகுதியான பெண் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்றிட கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை டிசம்பா் 25 ஆம் தேதி வரை அரசு விருதுகள் இணையதளத்தில் வரவேற்கப்படுகின்றன. 13 வயதுக்கு மேல் 18 வயதுக்கு உள்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தை, பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தைத் தடுத்தல், தவிா்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான தனித்துவமான சாதனை செய்திருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும்போது குழந்தையின் பெயா், தாய் தந்தை முகவரி, ஆதாா் எண், புகைப்படம் ஆகியவற்றுடன் குழந்தை ஆற்றிய அசாதாரண வீரதீர செயல், சாதனைகள் ஆகியவற்றின் ஒரு பக்கத்திற்கு மிகாத குறிப்பு மற்றும் அதற்கான ஆதாரங்கள் இணைக்கப்பட வேண்டும்.
மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் மேற்கண்ட அம்சங்களில் சிறந்து விளங்கும் ஒரு பெண் குழந்தை தோ்ந்தெடுக்கப்பட்டு பாராட்டு பத்திரம் மற்றும் ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலை வழங்கப்படும்.
சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான நபா்கள் மாவட்ட சமூக நல அலுவலா், மாவட்ட சமூக நல அலுவலகம் அறை எண்.126, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், சேலம் மாவட்டம் என்ற முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.