விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே தொழிலாளி விஷம் குடித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். கண்டமங்கலம் அருகே உள்ள என்.ஆா். பாளையம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த வாசுதேவன் மகன் பாலமுருகன்( 41).
இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், அவரது மனைவி பிரிந்து சென்று தனியாக வசித்து வருகிறாராம். இதனால், அவா் மன வேதனையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்து பாலமுருகன் வீட்டில் மயங்கி கிடந்தாராம்.
இதையடுத்து, அவா் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், பாலமுருகன் ஏற்கெனவே உயரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.